சித்திரமே 17

Loading

“கூப்பிட்டியாமா?” என்றபடி வந்த அல்லி, அவளது உடையை பார்த்து விட்டு மீண்டும் அதிர்ந்தார்.

“என்ன ஆண்ட்டி?”

“உனக்கு இந்த மாதிரி ட்ரெஸ் தான் பிடிக்குமா?”

தன்னைத்தானே குனிந்து பார்த்தவள், “இது நல்லா இருக்கே. ஏன் கேட்குறீங்க?” என்று விசாரித்தாள்.

“இல்ல.. வரும் போது சேலை கட்டி இருந்த. இப்ப எல்லாம் கட்டுறதே இல்ல”

“அன்னைக்கு கல்யாணம். சோ கட்டினேன். தினமும் பட்டுச்சேலையிலயா சுத்த முடியும்? ஏன் எனக்கு நல்லா இல்லையா?”

“நல்லா தான் இருக்கு” என்று சங்கடமாக சிரித்தவர், “இதெல்லாம் டிவில பார்த்தது. நேர்ல பார்க்க கொஞ்சம் வித்தியாசமா இருக்கு” என்றார்.

“போட நல்லா இருக்கு. போட்டுக்க வேண்டியது தான்” என்றவள், “நாளைக்கு நான் திரும்ப சாப்பிங் போகனும். நீங்களும் என் கூட வரனும். அத பேசத்தான் கூப்பிட்டேன்” என்றாள்.

“நான் எதுக்குமா? எனக்கு எதுவும் இத பத்தி எல்லாம் தெரியாது. நீ போயிட்டு வாயேன்”

“எனக்கு ஊர சுத்திக்காட்டுற ஐடியா இல்லையா? நானாவே எவ்வளவு சுத்துறது?”

“விக்ரம் கூட போகலாம்ல?”

“அவனா? அதுக்கு நான் வீட்டுலயே இருப்பேன். தேவையில்லாம பேசி என்னை டென்ஸன் பண்ணுவான். நீங்க வாங்க. ஊர சுத்திட்டு வெளிய சாப்பிட்டுட்டு வரலாம். விதுவும் வீட்டுக்குள்ளயே இருக்கான். அவனுக்கும் ஊர் சுத்திக் காட்டிட்டு வரலாம்” என்று முடித்து விட, அல்லி தலையை ஆட்டி வைத்தார்.

“நீங்க இங்க வொர்க் அவுட் பண்ண மாட்டீங்களா? இத தூக்குங்க பார்க்கலாம்” என்று டம்பிள்ஸ் ஒன்றை தூக்கி கையில் கொடுக்க, “வேணாம் கீழ போட்டுருவேன்” என்று தயங்கினார்.

“போட்டா பரவாயில்ல. வீடு ஒன்னும் உடைஞ்சுடாது. பிடிங்க”  என்று கையை பிடித்து திணித்தாள்.

அவர் தூக்கி விட்டு சிரிக்க, சித்தாராவுக்கும் சிரிப்பு வந்தது. இருவரும் அங்கிருக்கும் ஒவ்வொரு மிஷனை பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர். அல்லிக்கு எதுவும் தெரியாமல் இருக்க, அடிக்கடி சிரிப்பு தான் வந்தது. இருவரையும் தேடி விதார்த் வந்துவிட, அவனும் அதைத்தூக்குவேன் இதைத்தூக்குவேன் என்று சுற்ற, அங்கு சிரிப்பலை அடித்துக் கொண்டே இருந்தது.


சொன்னது போலவே மறுநாள் காலை சித்தாராவும் அல்லியும் விதார்த்தை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டனர். முதலில் அல்லி கோவிலுக்குப்போக விருப்பப்பட அங்கு சென்றனர்.

சித்தாரா இன்று சார்ட் டாப்பும், பட்டியாளாவுமாக பந்தமாக தயாராகி இருந்தாள். கோவிலுக்குப்போய் அவள் நெற்றியில் குங்குமம் வைத்ததும், அவளது முகத்தை பார்த்து அல்லிக்கு நிறைவாக இருந்தது.

“இப்ப தான் மங்களகரமா இருக்க” என்று கூறியதும், சித்தாராவுக்கு சிரிப்பு தான் வந்தது.

அல்லிக்காக அமைதியாக இருந்து விட்டு, வெளியே வந்தாள். வந்ததும் விதார்த் ஐஸ்கிரீம் வேண்டுமென்று கேட்க, நேராக ஐஸ்கிரீம் பார்லர் சென்று மூவரும் ஒவ்வொன்றை வாங்கி சிரித்து பேசியபடி சாப்பிட்டு முடித்தனர்.

அப்படியே ஊரைச் சுற்றக் கிளம்பினர். பார்ப்பதை எல்லாம் ரசித்து, அரட்டை அடித்துக் கொண்டு, எதையாவது வாங்கி கொறித்துக் கொண்டும் சந்தோசமாக சுற்றினர். விதார்த் ஒரு பொம்மையை பார்த்து கேட்க, அந்த கடைக்குள் நுழைந்து அதையும் வாங்கிக் கொண்டனர்.

அங்கிருந்து நேராக அல்லியை பார்லர் அழைத்துச் சென்றாள் சித்தாரா. அவளுக்காக என்று உடன் வந்த அல்லி, சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

“ஆண்ட்டி உட்காருங்க. பெடிக்யூர் பண்ணுவாங்க” என்று அமர, வைத்ததும் அவர் அதிர்ந்தார்.

“அய்யோ எனக்கா? வேணாம்”

“ஏன் வேணாம்? நல்லா இருக்கும் பண்ணுங்க”

“இந்த வயசுல போய் நெயில் பாலிஷ் எல்லாம்…”

“மூச்” என்று அவரை பேசவிடாமல் அதட்டினாள்.

அவர் பாவமாக முழிக்க, சித்தாராவுக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டு முறைத்தாள்.

“நான் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருக்கேன். ஒழுங்கா பண்ணுறீங்க. இல்லனா அவ்வளவு தான் சொல்லிட்டேன்” என்று மிரட்டினாலும் அதில் கோபமில்லை.

“பாரு விது உங்கம்மா மிரட்டுறா” என்று அவர் விதார்த்திடம் புகார் படிக்க, அவன் வேகமாக அல்லியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, “திட்டாதீங்கமா.. பாட்டி பாவம்” என்று கொஞ்சினான்.

சித்தாரா சிரித்து விட்டாள்.

“அப்ப சொல் பேச்சு கேட்க சொல்லு பாட்டிய. அடம்பிடிக்குறது என்ன பழக்கம்?” என்று கேட்க, “பாட்டி..அடம்பிடிக்க கூடாது. தப்பு” என்று அறிவுரை கூறினான்.

இப்போது அல்லியும் சிரிக்க, அதே மனநிலையில் கால் நகங்களை சுத்தம் செய்து அலங்கரித்துக் கொண்டார்.

அதை செய்து முடித்தப்பின், காலை பார்த்த போது அவருக்கு மிகவும் பிடித்து இருந்தது. எவ்வளவு சொல்லியும் கைக்கு அலங்காரம் செய்து கொள்ள மறுத்து விட்டார். முகத்துக்கு மட்டும் அடிப்படை அலங்காரத்தை செய்து முடித்தனர்.

பணத்தை கட்டி விட்டு மூவரும் வெளியே வர, கார் ஒன்று அவர்களை கடந்து சென்றது. அதில் விசாகா அமர்ந்து இருந்தாள். உடன் ஒரு ஆடவன்.

அந்த சாலை குறுகிய சாலை என்பதால், கார் நின்று நின்று மெதுவாக செல்,ல இருவரையும் நன்றாகவே பார்த்தனர்.

“இந்த பையன் தானா?” என்று அல்லியிடம் கேட்க, அவர் தலையசைத்தார்.

“வாங்க” என்று காருக்கு விரைந்தவள், “டிரைவர் அந்த கார ஃபாளோவ் பண்ணுங்க” என்று ஏறி அமர, விதார்த்தோடு அல்லியும் அமர்ந்து கொண்டார்.

கார் அவர்களை தொடர்ந்தது.

“அவங்க பின்னாடி ஏன் போகனும்?”

“போவோம் ஆண்ட்டி. இவள கையும் களவுமா பிடிக்கலாம். லவ் பண்ணுறான்னா வீட்டுல சொல்லிருக்க வேண்டியது தான? இப்படி ஊர் சுத்திட்டே இருக்கது தான் லவ்வா?” என்று வசனம் பேசியது எல்லாம் அல்லிக்காகத்தான்.

உள்ளே சித்தாராவிற்கு வேறு கணக்கு ஓடியது.

‘மூஞ்சியவா திருப்புற? இரு உன் லவ்வர் முன்னாடி உன் மானத்த காத்துல பறக்க விடுறேன்.’ என்று நினைத்துக் கொண்டாள்.

அவர்களது கார் விசாகா சென்ற காரை பின் தொடர்ந்து கொண்டிருந்தது. பத்து நிமிடத்திற்கு பின் கார் ஒரு ஹோட்டலின் முன்னால் நின்றது.

“கார ஓரமா பார்க் பண்ணி வைங்க வர்ரோம்” என்றவள் மகனை பார்க்க, அவன் தூக்கத்தில் இருந்தான்.

“இவனயும் பார்த்துக்கோங்க” என்று கூறி விட்டு, அல்லியை மட்டும் அழைத்துக் கொண்டு அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தாள்

விசாகா அந்த காதலனின் கையைப்பிடித்துக் கொண்டு லிஃப்ட் நோக்கி நடக்க, சித்தாராவும் விறுவிறுவென சென்றாள்.

லிஃப்டில் பலர் நுழைய, அவர்களோடு அல்லியும் சித்தாராவும் நுழைந்தனர். விசாகா இவர்களை கவனிக்கவில்லை. அவள் உலகத்தை மறந்து காதலனோடு ஒன்றி இருந்தாள்.

அல்லிக்கு தான் சங்கடமாக இருந்தது. இப்படி பின்னால் வந்து வேவு பார்ப்பது சரியாய் படவில்லை. லிஃப்டில் பலர் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்க, விசாகா இறங்கியதும் சித்தாராவும் பின்னால் வந்தாள்.

அவர்கள் பின்னால் செல்லாமல் சற்று தள்ளி நின்று கூர்ந்து கவனித்தாள். இருவரும் அறைக்குள் நுழைந்து கதவை அடைத்து விட்டனர்.

“யாரையாவது பார்க்க வந்துருக்காங்களா?” என்று கேட்கும் போதே அல்லியின் குரலில் நம்பிக்கை இல்லை. அவர்கள் அறைக்குள் சென்றதை பார்த்து, அவர் அதிர்ந்து போயிருந்தார்.

சித்தாரா மறுப்பாக தலையசைத்தாள்.

“அந்த பையன் தான்‌ ரூம் கார்ட் வச்சு கதவ ஓபன் பண்ணுறான்.”

“என்னம்மா இது?”

அல்லியை திரும்பி பார்த்தவள் அவரது பதட்டத்தை பார்த்து விட்டு, “ஒரு வேளை இனிமே ஃப்ரண்ட்ஸ் வரலாம் இல்லையா ஆண்ட்டி? வெயிட் பண்ணுவோம்” என்று சமாளித்தாள்.

பதினைந்து நிமிடம் அங்கு கேமராவில் படாமல் தள்ளி நின்றிருந்தனர். கதவு திறப்பதாகவும் இல்லை. யாரும் வரவும் இல்லை. அல்லிக்கு படபடவென இதயம் அடித்துக் கொண்டது.

இதற்கு மேல் பொறுக்க முடியாது என்று தோன்ற, வேகமாக சென்று கதவை தட்டினாள் சித்தாரா. உடனே திறக்கப்படவில்லை. வெளியே தொந்தரவு செய்யக்கூடாது என்ற குறியீடு வேறு இருக்க, பல்லைக்கடித்துக் கொண்டு கதவை பலமாக தட்டினாள்.

“யார் இது?” என்று எரிச்சலாக கத்தியபடி கதவைத்திறவன், அரைகுறை உடையில் இருந்தான்.

அவனுக்கு வெளியே நின்றிருந்த சித்தாராவை யாரென்று தெரியவில்லை.

“யார் நீங்க?” என்று கேட்க,, அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல், “எங்க அவ?” என்று கதவை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தாள்.

கலைந்து போன உடையை அவசரமாக சரி செய்தபடி வந்த விசாகாவை பார்த்து, அல்லிக்கு நெஞ்சம் வெடித்து விட்டது.

இருவரையும் பார்த்து விசாகா அதிர்ந்து நிற்க, ‘மாட்டுனியா?’ என்று பார்த்தாள் சித்தாரா.

“ஆண்ட்டி இவள கூட்டிட்டு கிளம்புங்க” என்று கூற, “யார் நீங்க? எதுக்கு வந்தீங்க?” என்று எகிறிக் கொண்டு முன்னால் வந்தான் அவன்.

“ஏய்..” என்று சித்தாரா புறங்கையை ஓங்கி இருந்தாள்.

அதில் அவன் அதிர்ந்து நிற்க, அல்லியைத்திரும்பிப் பார்த்தாள். அவர் வேகமாக சென்று விசாகாவின் கையைப்பிடித்து தரதரவென இழுத்துச் செல்ல, அங்கிருந்த விசாகாவின் கைப்பையை எடுத்துக் கொண்டாள் சித்தாரா.

திரும்பி நடந்தவள் சட்டென நின்று, காலை சுழட்டி ஹீல்ஷை வைத்து அவன் வயிற்றில் உதை விட்டிருந்தாள். அலறிக்கொண்டு அவன் கீழே விழ, சுட்டு விரலால் பத்திரம் காட்டி விட்டு வெளியேறினாள்.

அல்லி விசாகாவை தரதரவென இழுத்துச்சென்று லிஃப்ட் முன்பு நின்றிருந்தார். இன்னும் அவர்கள் தளத்திற்கு லிஃப்ட் வரவில்லை. அதற்குள் சித்தாராவும் வந்திருக்க, மூவரும் உள்ளே நுழைந்து கீழே வந்து சேர்ந்தனர்.

காரைக்கொண்டு வரச்சொல்லி அல்லியை முன்னால் ஏற்றி விட்டு, சித்தாரா பின்னால் ஏறிக் கொண்டாள். விதார்த் தூக்கம் கலைந்து பார்க்க, அவனை மடியில் போட்டு தட்டிக் கொடுத்தாள்.

உள்ளே ஏறிய விசாகா எதோ பேச வர, “உஸ்ஸ்.. என் பிள்ள முழிச்சான். நடக்குறதே வேற” என்று மிரட்டி வைத்தாள்.

கார் நேராக வீடு வந்து சேர்ந்தது.

சித்தாரா மகனை தூக்கிக் கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்று விட்டாள். அல்லி விசாகாவை ஒரு பார்வை பார்த்து விட்டு, மனம் கனக்க அகன்றார்.

சில நிமிடங்கள் விசாகாவுக்கு ஒன்றும் ஓடவில்லை. அவள் அப்படியே நிற்க, “விசா” என்று வேதாவின் குரல் கேட்டது.

நிமிர்ந்து பார்த்தாள்.

“என்ன இப்படி நிக்கிற? நீ தனியா தான‌ கிளம்புன? அதுங்களோட சேர்ந்து வர்ர? மேல இருந்து பார்த்தேன்.” என்று சொல்லிக் கொண்டே அருகே வந்தாள்.

அதற்குள் சுதாரித்த விசாகாவுக்கு, முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆரம்பித்தது.

“நான் என் ஆளோட வெளியே போயிருந்தேன். இவங்க ரெண்டு பேரும் வந்து இழுத்துட்டு வந்துட்டாங்க. அவன் என்னை பத்தி என்ன நினைச்சுருப்பான்?”

“இழுத்தா நீ ஏன் வந்த?”

“ப்ச்ச்.. அப்ப இவங்கள பார்த்து சாக் ஆகிட்டேன். இழுத்துட்டு வந்துட்டாங்க”

“அங்க வச்சே இவங்கள துரத்திருக்கனும். கூப்பிட்டாங்கனு வந்துருக்க”

“நான் தான் சாக்ல இருந்தேன்னு சொல்லுறேன்ல?” என்று விசாகா எரிந்து விழுந்தாள்.

“சரி சரி குதிக்காத. அந்த சித்தராங்கிக்கு கொழுப்பு ஓவராத்தான் இருக்கு. எதாவது பண்ணி வீட்ட விட்டு துரத்தனும். அவ கூட சேர்ந்துட்டு இந்த சித்தியும் ஆடுது”

“என் கையை பிடிச்சு இழுத்து.. இங்க பாரு சிவந்தே போச்சு. அந்த சித்திக்கு இருக்கு. என்னை ஃபாலோவ் பண்ணி வந்துருக்காங்க”

“எதாவது வாயத்திறந்தா நல்லா திட்டி விடு. மனசுல இந்த வீட்டுக்கே மகாராணினு நினைச்சுட்டு சுத்துது ரெண்டும்”

“ப்ச்ச்” என்று எரிச்சலாக உச்சு கொட்டி விட்டு மாடிக்குச் சென்றாள்.

அவள் திரும்பி வரும் போது, வேதாவை தவிர யாரும் கண்ணில் படவில்லை.

“என்னடி? உன் ஆள் கிட்ட பேசுனியா?”

“அவன் ஃபோன எடுக்க மாட்டேங்குறான். ப்ச்ச் கோபமா இருப்பான்”

“எல்லாம் இதுங்களால தான். விடாத. சித்தினு ஒருத்தி இருக்காளே முதல்ல அவள அடக்கு. அப்புறமா மத்தவளும் அடங்குவா. இவங்க வாழ்க்கையில நீ தலையிட்டியா என்ன? இதுங்க எதுக்கு உன் வாழ்க்கையில மூக்க நுழைக்கிதுங்க? விடாத. நல்லா கேளு” என்று முழுதாய் தங்கைக்கு விசத்தை ஏற்றி விட்டாள் வேதவல்லி.

அதன் பலனை சித்தாரா சிறிது நேரத்தில் தரப்போவது தெரிந்திருந்தால், வாயை மூடிக் கொண்டிருந்திருப்பாளோ என்னவோ?

தொடரும்.

Leave a Reply