Episode 18
![]()
குமரன் சென்னையில் தான் தங்கி இருந்தான். அவனுடைய இடத்தை பற்றி அறிய மாதவனையே அனுப்பினாள் சுலோக்ஷனா. வேறு வழியில்லாமல் மாதவன் கண்டுபடித்து வந்து சொல்ல, அந்த இடத்திற்கு கிளம்பினார்கள்.
கடலோரம் அமைந்து இருந்த பங்களாவில் குமரன் தனியாக தான் இருந்தான். மாதவன் எவ்வளவு முயன்றும் குமரனுக்கு விசயத்தை முதலிலேயே தெரிவிக்க முடியவில்லை. கோபமாக மதுவை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான் தினகரன் திட்டியதற்காக. தனியாக இருக்கும் பெண்ணிடம் தோற்றுப்போய் வந்தது அவனுக்கே அவமானம் என்றால், தினகரன் வேறு குத்தி காண்பித்து திட்டி விட்டான். ஆதாரம் இல்லாமல், ஊட்டி பக்கம் தலைவைத்து படுக்க கூடாது என்று கூறிவிட, சென்னையில் தான் இருந்தான்.
அவன் சுயநினைவில் இல்லாத நேரத்தை கணக்கிட்டுத் தான் சென்றாள் நிவி. குமரனை பற்றிய விவரங்கள் எல்லாம் மோகன் சேகரித்து கொடுத்து இருந்தார். இது வேறு யாருக்கும் தெரியாது.
ஸ்கூட்டியை நிறுத்தி பூட்டி விட்டு, சாவியை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள். ஒரே ஒரு வேலைக்காரன் மட்டும் இருந்தான். அவனை சமாளிக்கும் பொறுப்பை மாதவனிடம் ஒப்படைத்து விட்டு, குமரன் இருக்கும் அறையை தெரிந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.
முழு போதையில் தினகரனை திட்டிக் கொண்டிருந்தான் குமரன். அறையினுள் அடித்த மது வாடை குடலை புரட்டியது. மூக்கை மூடிக் கொண்ட சுலோக்ஷனா, “மிஸ்டர் ரைட் ஹேண்ட். என்ன காலங்காத்தல உன் பாஸ்க்கு அர்ச்சனையா?” என்று சத்தமாக கேட்க, அவளை திரும்பி பார்த்தான்.
மயக்கத்திலும் தெளிவாக சுலோக்ஷனாவின் முகம் தெரிந்து விட, “வந்துட்டியா? எல்லாம் உன்னால தான்டி உன்னால..” என்று கத்தினான். சாதாரண நேரமென்றால் “டி” போட்டதற்கு பல்லை உடைத்து இருப்பாள். போதையில் இருப்பவனை அடித்து ஒன்றும் பயனில்லை. பல்லை கடித்தவள், “ஆமாடா நான் தான் கடத்தல் தொழில் பண்ணுறேன் பாரு. உன் பாஸ் தான வண்டி வண்டியா இல்ல இல்ல ஃப்ளைட் ஃப்ளைட்டா கடத்திட்டு இருக்கான்.” என்று பதிலுக்கு எகிறினாள்.
“ஏய் என் பாஸ பத்தி தப்பா பேசாத” என்று விரலை நீட்டிக்கொண்டு எழுந்தவன், நிற்க முடியாமல் தொப்பென அமர்ந்தான்.
“அய்யடா இல்லாததையா சொல்லிட்டேன். அவன் பெரிய உத்தமன் பாரு. உன் பாஸ் போதை மருந்த கடத்துறவன் தான.” என்று கூறியவள் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தாள்.
எதிரில் இருப்பவளை பார்க்க பார்க்க, வெறியேறியது குமரனுக்கு. கண்ணாடி டம்ளரில் இருந்த மது மொத்தத்தையும் வாயில் சரித்துக் கொண்டான்.
“ஆமா கடத்துறார். போத மருந்த தான் கடத்துறார். ஏன் அந்த போத மருந்த நான் கூட சாப்பிட்டு இருக்கேன். அதுனால ஒன்னும் யாரும் செத்து போகலையே. அப்படி என்ன பெரிய தப்பு பண்ணிட்டார். காலேஜ்ல படிக்குற **** ங்க எல்லாம் வாங்கி தின்னுதுங்க. ஒன்னும் ஆகலையே. விசத்த கடத்துற மாதிரி இவ்வளவு பிரச்சனை கொடுக்குற. ஒழுங்கா அந்த ஆதாரத்தை எல்லாம் எடுத்து வச்சுட்டு கிளம்பு. இல்ல உன்னை உயிரோட விட மாட்டேன்” என்று குழறிய குரலில் மிரட்டினான்.
“அடேங்கப்பா.. நீ என்னை விட மாட்டியா? உன் வீட்ட சுத்தி இப்போ போலீஸ் இருக்கு. என்ன செய்யுறனு பாத்துடுறேன்” என்றவள் எழுந்து அறைக்குள் நடந்தாள்.
போலீஸ் என்றதும் பயம் வந்து தொற்றிக் கொண்டது. மதன் வேறு அவன் கண்முன் தோன்றி மறைய, போதை தெளிய ஆரம்பித்தது. தீடிரென தலையில் பலமாக அடி விழ, அறை குறை மயக்கத்தில் இருந்தவன் முழு மயக்கத்திற்கு சென்று விட்டான்.
அறையை பூட்டி விட்டு வெளியே வந்தவள், “வாங்க மாதவன் கிளம்பலாம்” என்று கூறினாள். அந்த வேலைகாரன் மாதவனை நகர விடவில்லை. கேள்வி கேட்டு குடைந்து ஒரு வழியாக்கி விட்டான். அறைக்குள் நடந்த பேச்சு எதுவும் மாதவனுக்கு தெரியவில்லை.
“என்ன நிவி எதாவது சொன்னானா?” என்று கேட்க, “அவன் முழு போதையில இருக்கான். ச்சை. தப்பான நேரத்துல வந்துட்டோம். இப்போ மட்டையாகிட்டான். பேசி நோ யூஸ். தெளிவா இருக்கப்போ வரலாம்” என்று கூறியவள் நிற்காமல் வெளியேறி விட்டாள்.
அவர்கள் சென்ற இரண்டாவது நிமிடம் உள்ளே நுழைந்த ஆட்கள், வேலைக்காரன் உதவியோடு குமரனை அள்ளிக் கொண்டு சென்று விட்டனர்.
*.*.*.*.*.*.
“ஹலோ அத்தான். வர்ரேன்னு சொல்லிட்டு இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க” என்று ஸ்வரண் கேட்க, “நான் வரேன் ஆனா உங்கக்கா வரனுமே. சி.ஐ.டி மேடம்க்கு ஆயிரத்தெட்டு வேலை. முடிச்சுட்டு தான வர முடியும்?” என்று பதிலளித்தான் செழியன்.
“அப்போ நீங்க முதல்ல வாங்க அக்கா பின்னாடி வரட்டும்.”
“அப்படி வர முடியாது ஸ்வரண். ஒன்னா தான் வரனும். சேர்ந்தே வரோம்”
“சரி விடுங்க. உங்களுக்குனு வாங்கி விதவிதமா சமைச்சு வச்சாங்க. உங்களுக்கு குடுத்து வைக்கல.”
“அடப்பாவி. எல்லாத்தையும் நீயே தின்னுடாத. உங்கக்கா வந்தா உன்னை உண்டு இல்லனு ஆக்கிடுவா” என்று சிரிப்போடு கூறினான்.
“அந்த சூனாபானாக்கு எல்லாம் பயந்தா ஆகுமா”
“சூனாபானா வா?”
உடனே ஸ்வரண் அந்த கதையை ஓட்ட ஆரம்பித்து விட்டான்.
“போதும் டா சாமி. பாவம் உங்க அத்தை. இவ கிட்ட சிக்கி சின்னா பின்னமாகி இருக்காங்க போல” என்று கூறியவனுக்கு சிரிப்பை அடக்குவது பெரும்பாடாக தான் இருந்தது.
திடீரென கைபேசியில் கேட்ட ஒலியை கவனித்தவன், “ஸ்வரண் நான் அப்புறம் பேசுறேன்” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.
காலையில் சுலோக்ஷனா சொன்ன ஜி.பி. எஸ் இப்போது இயக்கத்தில் இருந்தது. அப்படி என்றால் அவளுக்கு ஆபத்தா? அவள் இருக்கும் இடத்திற்கு இப்போதே அவன் கிளம்பினாலும், சென்று சேர நேரமாகி விடும். அந்த இடத்தை வேறு யாருக்கோ அனுப்பியவன், உடனே அங்கு செல்ல சொல்லி கட்டளை விதித்தான்.
*.*.*.*.*.*.
சுலோக்ஷனா அறையில் நுழைந்த பின், வேலைக்காரனை சமாளிக்க முடியாமல் மாதவன் திணறிக் கொண்டிருந்தான். அவனை கட்டு படுத்த முடியாமல் வெளியே வந்தவன் தினகரனை அழைத்தான்.
அவன் இருக்கும் இடத்தை பற்றி சொன்னவன், “இப்போ என்ன சார் பண்ணுறது? வேலைக்காரன் என்னை விட மாட்டேங்குறான். அவ கண்டுக்காம உள்ள போய்ட்டா. எதையாவது உளரி வச்சுட்டா என்ன பண்ணுறது?” என்று கேட்டான்.
சட்டென எதோ முடிவுக்கு வந்த தினகரன், “நீங்க வர வழியில எதாவது ப்ளேஸ் இருந்துச்சா? நம்ம வேலைக்கு ஒத்து வர மாதிரி? சைலன்ட்டா அவள தூக்கிடலாம். இப்போதைக்கு தனியா தான இருக்கா?” என்று கேட்க, “ஆமா சார் நானும் அவளும் மட்டும் தான் வந்து இருக்கோம்” என்று பதில் கூறினான்.
உடனே திட்டம் போட்டு அதை செயல் படுத்த ஆட்களை தயார் செய்து விட்டான். வெளியில் வந்து சுலோக்ஷனா ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு முன்னால் செல்ல, மாதவன் பைக்கில் அவளை பின் தொடர்ந்தான்.
ஒரு குறுக்கு சந்து பக்கம் வளையும் போதே, சுலோக்ஷனாவின் மனம் படபடவென அடிக்க ஆரம்பித்தது. குனிந்து ஸ்கூட்டியின் சாவி கொத்தில் இருந்ததை பார்த்து விட்டு வேகத்தை குறைத்தாள்.
மெல்ல மெல்ல வேகம் குறைந்து கொண்டே போக, தெருவின் நடுப்பகுதியில் வந்ததும் பெரிய மரக்கட்டை ஒன்று அவள் முன்னால் குறுக்காக வந்து விழுந்தது. வேகத்தை முதலிலேயே குறைத்து விட்டதால் ப்ரேக் போட்டு நின்று விட்டாள். ஒரு அடி முன்னால் வந்திருந்தாள் அவள் தலையில் விழுந்து இருக்கலாம்.
திட்டம் என்னவோ அவள் மீது கட்டையை விழ வைப்பது தான். கட்டை விழுந்த அடுத்த நொடி பாக்கெட்டில் கை விட்டு எதையோ துளாவி எடுத்தவள், அவசரமாக எதையோ செய்து விட்டு மீண்டும் பாக்கெட்டில் போட்டுக் கொண்டாள்.
ஒரு நொடிக்குள் இதை செய்து முடித்ததில் யாரும் அவளின் செயலை அறியவில்லை. மரம் முழுவதுமாக பாதையை அடைத்து இருந்தது. சுற்றிக்கொண்டு செல்ல முடியாது. பக்கத்தில் வந்தவனை திரும்பி பார்க்க, அவன் மூன்றடிக்கு முன்னாடியே வண்டியை நிறுத்தி இருந்தான்.
அந்த மரம் விழப்போவது அவனுக்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டும். அவனை திரும்பிப் பார்த்தவள் மீண்டும் பாதையை பார்க்கும் போது இரண்டு பேர் நின்று இருந்தனர்.
மரத்தை போட்டு அவளை தூக்கிக்கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்க, அவள் திடமாக அமர்ந்து இருந்தாள். சரி இப்படியே கடத்தி செல்வோம் என்று முடிவெடுத்து வெளியே வந்தனர்.
“யாரு டா நீங்க? இதென்ன மரம்? எடுங்க முதல்ல” என்று சுலோக்ஷனா பேச்சு கொடுத்தாள்.
“நாங்க யாரா இருந்தா உனக்கு என்ன?” என்று கேட்டவன் மாதவனை பார்த்து, “டேய் நீ என்ன நிக்குற? கிளம்பு கிளம்பு” என்று மிரட்டினர்.
மாதவனும் பயப்படுவது போல் நடித்து, வந்த வழியே சென்று விட்டான். அவன் இதை தான் செய்வான் என்று யூகித்த சுலோக்ஷனா, ஸ்கூட்டியை பூட்டி விட்டு கை கட்டி அமர்ந்தாள்.
அவள் தெனாவெட்டாக அமர்ந்து இருப்பது அந்த இருவருக்கும் கோபத்தை கிளப்பியதோ? மரத்தை ஒரே தாவலில் தாண்டிக் கொண்டு அவளிடம் வந்தனர்.
“இறங்கு” என்று அவளை தொட, மளமளவென நான்கு பேர் முன்னாலும் இரண்டு பேர் பின்னாலும் வந்து நின்று விட்டனர்.
அவளை கடத்த வந்த இருவரும் அதிர்ந்து நிற்கும் போதே, முன்னால் இருந்த நான்கு பேரும் இரண்டு பேரை வளைத்து பிடிக்க தப்பிக்க நினைத்து அடிக்க பாய்ந்தனர். பாய்ந்த வேகத்தில் அடிவாங்கி கீழே விழ, “போதும் போதும். எந்திரிங்க டா” என்றாள் நிவி.
“உங்கள அனுப்புனது தினகரன் தான?” என்று கேட்டாள். அவர்கள் பதில் சொல்லாமல் நிற்க, “இவன் பல்ல உடைங்க” என்று பிடித்திருந்தவர்களுக்கு கட்டளை விதித்தாள். அடுத்த நொடி அவனின் ஒரு பல் தெறித்து கீழே விழுந்தது.
மற்றொருவனை பார்த்து, “நீ சொல்லு. தினகரன் தான?” என்று கேட்க வேகமாக தலையாட்டியவன், “எங்கள விட்டுட சொல்லுங்க மேடம் கிளம்பிடுறோம். உங்க பக்கமே வரமாட்டோம். ப்ளீஸ் மேடம் விட்ருங்க” என்று கெஞ்சினான்.
“சரி விடுங்க. இப்போ இங்க என்ன நடந்துச்சுனா.. நீங்க என்னை புடிக்க வந்த நேரம், நிறைய பேர் இந்த தெருக்குள்ள வந்ததால உங்க வேலைய செய்ய முடியல. நான் தப்புச்சுட்டேன். என்ன புரியுதா?” என்று கேட்க, அவர்கள் இருவரும் வேகமாக தலையாட்டி வைத்தனர்.
அவர்களை விட்டு விட்டு, “அப்பா கிட்ட சொல்லிடுங்க அண்ணா” என்று அங்கு நின்றிருந்த நால்வரிடம் சொன்னவள், பின்னால் நின்றவர்களை கேள்வியாக பார்த்தாள்.
“செழியன் சார் அனுப்புனார் மேடம்” என்று சொல்ல, அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “நான் அவர் கிட்ட சொல்லிக்கிறேன். தாங்க்ஸ்” என்றவள் கிளம்பி விட்டாள்.
*.*.*.*.*.*.
தன்னுடைய ஆட்களை போக சொல்லி விட்டு, வீட்டில் இருக்க முடியாமல் செழியன் கார் சாவியை எடுத்துக் கொண்டு இறங்கினான். காருக்கு வந்து சேரும் முன் அவனது கை பேசி சினுங்கியது.
“சார் ஆல்ரெடி நாலு பேர் மேடம பக்கத்துல இருக்காங்க சார்” என்று தெரிவிக்க, ‘மாமா அனுப்பி இருக்கனும்’ என்று முடிவுக்கு வந்தான்.
“சரி மேடம் கிளம்புனதும், வீடு வரை ஃபாளோவ் பண்ணுங்க. அவளுக்கு தெரிய வேணாம்” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.
இருக்கும் பதட்டத்தில் காரை செலுத்த முடியும் என்று தோன்றவில்லை. அவள் நலம் என்று தெரிந்ததே போதுமாக இருக்க, படியிலேயே அமர்ந்து விட்டான்.
*.*.*.*.*.*.
தன் வேலையில் இருந்த நித்தின் கைபேசி எழுப்பிய ஒலியை கவனித்து விட்டு, சுலோக்ஷனா இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் இருக்கும் தனது ஆட்களை அனுப்பி வைத்தார்.
ஆபத்து காலத்தில் மட்டுமே பயன்படுத்த சொல்லி நித்தின் தான் அதை வாங்கி கொடுத்து இருந்தார். அவனது ஆட்கள் பார்ப்பதற்கு, “ஜிம் பாய்ஸ்” போன்று இருந்தாலும், படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள்.
நித்தினுடைய நிறுவனத்தின் பல கிளைகளில் வேலை செய்பவர்கள். சுலோக்ஷனாவிற்கு ஆபத்து என்றால் பக்கத்தில் இருக்கும் தன் நிறுவனத்தின் ஆட்களை அனுப்பி வைத்து விடுவார்.
அவர்களுக்கு நிரந்தர வேலையோடு இப்படி பாதுகாக்கவும் சம்பளம் உண்டு. சுலோக்ஷனா பாதுகாக்க பட்டதும் அவனுக்கு தெரிவித்தவர்கள, “பாஸ் மேடமோட சாரும் அவங்கள சேவ் பண்ண ஆளு அனுப்பி இருக்கார் சார்” என்றான்.
அதை கேட்டதும் நித்தினின் முகத்தில் நிறைவான புன்னகை. சரியான இடத்தில் மகளை கொடுத்திருக்கிறோம் என்பது, எல்லா பெற்றோர்களுக்கும் நிம்மதியை கொடுக்க கூடியது. நித்தினும் இப்போது அந்த நிம்மதியை தான் உணர்ந்தார்.
*.*.*.*.*.*.
வாசலில் ஸ்கூட்டி சத்தம் கேட்க, செழியன் எழுந்து வீட்டிற்குள் சென்று விட்டான். சுலோக்ஷனா அறைக்குள் நுழைந்த அடுத்த நொடி அவளை இழுத்து அணைத்தவன், இதழில் புதைந்து போனான்.
மொத்த தவிப்பையும் அவளது இதழில் கொட்டியவன், மேலும் மேலும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
சுலோக்ஷனாவிற்குமே, தன்னை எவ்வளவு தைரியமாக காட்டிக் கொண்ட போதும், மனம் படபடக்க தான் செய்தது. அந்த கனவு வேறு பயமுறுத்தி இருந்தது. அதனால் எல்லா வேலைகளையும் விட்டு விட்டு வீட்டிற்கு வந்து விட்டாள்.
செழியனும் தன்னை பாதுக்காக முயற்சிக்கிறான் என்பது வேறு அவளுக்கு ஆனந்தமாக இருந்தது. அவனுக்கு நன்றி சொல்ல தான் வேகமாக வந்தாள். வந்தவளை ஒரு வார்த்தை கூட பேச விடாமல் செய்து விட்டான் செழியன்.
இடுப்பெலும்பு உடைந்து விடும் அளவு இறுகி போயிருந்தது அந்த அணைப்பு. வலித்த போதும் விலகாமல் நின்று இருந்தாள். அவனது முத்தத்தில் காமத்தை விட, வேறு எதோ ஒன்று அவளை அசையாமல் கட்டி போட்டது. அழுத்தமாக புதைந்து தன் தவிப்பை எல்லாம் தீர்த்துக் கொண்டவன், இதழை விட்டு பிரிந்து அணைத்துக் கொண்டான்.
“பயந்துட்டேன் சனா. எதுக்கும் பயப்படாத என்னை பயப்பட வச்ச பெருமை உனக்கு தான்” என்று கூறியவன், அவளது கழுத்தில் முகத்தை புதைத்துக் கொண்டான்.
சட்டை காலரை பற்றி இருந்தவளின் கை, மெல்ல இறங்கி அவனை அணைத்துக் கொண்டது. சிறிது நேரம் அப்படியே இருந்தனர். அந்த அணைப்பில் அவளது பயம் மொத்தமாக வடிந்து விட, இப்போது வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டது. அவனிடம் இருந்து பிரிய நினைக்க, கழுத்திலிருந்து நிமிர்ந்தவன் அவளை விடாமல் கைவளைவில் வைத்துக் கொண்டான்.
“அடிக்கடி இப்படி விபரித விளையாட்டு விளையாடாத” என்று செழியன் கூற, அவனை கூர்ந்து பார்த்தாள்.
‘தன் வேலையை தடுக்க பார்க்கிறானோ?’ என்று நினைத்தவள், “விளையாண்டா?” என்று கேட்டாள்.
“எனக்கு டபுள் ஓகே” என்றவனது பார்வை அவளது இதழில் நிலைத்து இருந்தது.
‘அடப்பாவி! எல்லாத்தையும் இவனுக்கு சாதகமா கொண்டு வந்து முடிக்குறானே?’ என்று திருதிருவென முழித்தாள்.
அவளது முழியை பார்த்து மெல்ல சிரித்தவன் தலையில் முட்டி, “சரி கிளம்பு ” என்றான்.
“எங்க?”
“அத்த உனக்கு விதவிதமா சமைச்சு வச்சு இருக்காங்களாம். அத எல்லாம் உன் தம்பி காலி பண்ணுறானாம்”
“என்னது அவன் தின்னுறானா?” என்று கேட்டவள், வேகமாக கிளம்ப ஓடி விட்டாள். அவள் ஓடுவதை சிரிப்போடு பார்த்தவன், ‘கொஞ்ச நேரத்துல பதற வச்சுட்டா’ என்று நினைத்து வாயை குவித்து காற்றை வெளிவிட்டவன், தலைமுடியை அழுந்த கோதி தன்னை நிலைபடுத்திக் கொண்டான்.
