பூங்கவிதை 13
![]()
ஒரு வாரம் கடந்து, வீரா வந்து சேர்ந்தான். அலுவலகத்தில் நுழையும் போதே, பலர் அவனை வித்தியாசமாக பார்த்தனர்.
நேற்று தான் ஜாக்ஷி கொடுத்த பதவி உயர்வை ஏற்றுக் கொள்வதாக, செய்தி அனுப்பி இருந்தான். அவளிடம் பேசவில்லை. அந்த செய்திக்கு அவளும் சம்மதம் சொல்லி விட, இதோ காலையில் மொத்த அலுவலகத்துக்கும் செய்தி பரவி இருந்தது.
வீராவை பெரிய பதவியில் அமர வைத்து, அவனுக்கென தனி அறையும் கொடுக்கப்பட்டது. வேலையில் அமர்ந்து சில நிமிடங்களில், அவனது நண்பன் வந்து வாழ்த்து தெரிவித்தான்.
கூடவே, வெளியே பேசிக் கொள்ளும் விசயத்தையும் சொன்னான்.
“இந்த பிரமோஷனுக்காக தான், நீ அவங்கள போட்டுக் கொடுத்தியாம். ஜால்ரா தட்டி பதவி வாங்கிட்டியாம். என்னென்ன பேசுதுங்க தெரியுமா? நேத்து வரை, வீரா சார் மாதிரி பெஸ்ட் யாரும் இல்லனு பேசிட்டு, இப்ப அப்படியே திருப்பி பேசுதுங்க” என்று அவன் கோபமாக பேச, “சரி.. வா.. நானே பேசுறேன்” என்று எழுந்து விட்டான்.
“அதுங்க பேசட்டும் வீரா. நீ ஏன் அதுங்களுக்கு விளக்கம் சொல்லுற?” என்று நண்பன் தடுத்தும், வீரா கேட்பதாக இல்லை.
நேராக சென்று, அத்தனை பேரின் முன்பும் நின்றான்.
“ஒரு நிமிஷம். எல்லாரும் என்னை பாருங்க”
வேலையை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும், அவனை நிமிர்ந்து பார்த்தனர். பலர் கண்களில் பொறாமையும் அவமரியாதையும் தான் இருந்து.
“இங்க ஒரு காசிப் போகுது போல? நான் மேலிடத்துக்கு ஜால்ரா தட்டித்தான், இந்த பிரமோஷன வாங்கிருக்கேன்னு சொல்லிருக்கீங்க. அப்புறம்.. ஹான்.. போட்டுக்கொடுத்து வந்த பிரமோஷன். இப்படினா நானும் போட்டுக் கொடுத்து பிரமோஷன வாங்கிருப்பேனேனு பேசுறீங்க போல?”
எல்லோரும் பம்ம ஆரம்பித்தனர். உள்ளுக்குள் பேசுவது, அவன் காதுக்கும் சென்று விட்டதே என்ற பதட்டம்.
“அப்ப எனக்கு எந்த திறமையும் இல்ல? போட்டுக் கொடுத்ததால மட்டும் தான், எனக்கு பிரமோஷன் வந்துச்சு அப்படித்தான?”
இதற்கு பதில் சொல்ல தெரியாமல் வேறு பக்கம் பார்த்தனர்.
“உங்களுக்கே தெரியும். நீங்க செய்யுற பல தப்ப திருத்தி சரி பண்ணது நான். நான் நினைச்சுருந்தா, உங்க தப்புக்கெல்லாம் சேர்த்து உங்க கிரெடிட்ல கை வச்சுருப்பேன். நான் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போனா? இஷ்டத்துக்கு பேசுறீங்க? இப்ப என் முன்னாடி பேசுங்க பார்ப்போம்”
“ஆனா சார்.. நீங்க அவங்கள போட்டுக் கொடுத்தது உண்மை தான?” என்று ஒருத்தி கேட்டாள்.
“நல்ல கேள்வி தான். ஆமா போட்டுக் கொடுத்தேன். ஆதாரத்தோட போட்டுக் கொடுத்தேன். அந்த ஆதாரத்த எடுக்க, எனக்கு ஆறு மாசம் ஆச்சு.”
எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
“அப்போ நீங்க இங்க வந்ததே அதுக்கு தானா?” என்று ஒருவன் கேட்க, “அதுக்கு தான்” என்று ஒப்புக் கொண்டான்.
“உங்களுக்கெல்லாம் தெரியாத ஒன்னு சொல்லுறேன். எங்க ஃபேமிலியும் ஜாக்ஷி மேடம் ஃபேமிலியும் ரிலேடிவ்ஸ். ஃபேமிலி ஃப்ரண்ட்ஸ். எனக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கொடுத்ததே, ஜாக்ஷி மேடம் தான். இதுக்கு மேல நீங்களே யோசிச்சுக்கோங்க. ஆனா என் திறமைய பத்தி பேசாதீங்க. உங்க லெவல் எல்லாம் என்னனு எனக்கு நல்லா தெரியும். அப்புறம், நான் இப்பவும் எப்பவும் போல இருக்கனும்னு தான் ஆசைப்படுறேன். நீங்க என்னை எப்படி டிரீட் பண்ணுறீங்களோ, அப்படி தான் பதில் கிடைக்கும். ஞாபகம் வச்சுக்கோங்க. இப்ப வேலைய பாருங்க”
பேச்சு முடிந்தது என்று அவன் சென்று விட, அத்தனை பேருக்கும் அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை.
“ஃபேமிலி ஃப்ரண்ட்? ரிலேட்டிவ்? அடப்பாவிங்களா!”
“அப்ப இதுக்காகவே சார உள்ள கூட்டிட்டு வந்தாங்களா மேடம்?”
“ஹேய்.. இப்ப தான்டி ஞாபகம் வருது. வீரா சார அன்னைக்கு நம்ம பழைய பாஸ் இறந்த வீட்டுல பார்த்தேன்”
“என்னது? உண்மையவா சொல்லுற?”
“ஆமாடி.. அன்னைக்கு இவரு இருந்தாரு. நாம எல்லாம் மாலை போட்டு வெளிய வந்துட்டோம். ஆனா இவர் உள்ள ஹால்ல நின்னுட்டு இருந்தாரு. ச்சே அப்பவே தெரிஞ்சுருக்கனும் இவங்க சொந்தக்காரவங்கனு..”
“அப்ப உண்மைய தான் சொல்லிட்டுப் போறாறா? அடக்கடவுளே”
“அப்ப வேணும்னே இவர கூட்டிட்டு வந்து, கூண்டோட மத்தவங்கள அள்ளிட்டாங்களா மேடம்?”
“இருக்கும். அதான் ஆதாரத்தோட எடுத்து கொடுத்தேன்னு சொல்லுறாரே”
“இப்படி ஒரு ஸ்பைய யாருமே எதிர்பார்க்கல. அதான் மாட்டிக்கிட்டாங்க”
நம்ப முடியாமல் புலம்பி விட்டு அடுத்த வேலையை பார்த்தனர்.
*.*.*.*.*.*.
இரண்டு நாட்கள் கடந்தது..
வீரா வேலை பார்த்துக் கொண்டிருக்க, ஜாக்ஷியிடமிருந்து அழைப்பு வந்தது.
“ஹலோ”
“ஃப்ரியா இருக்கீங்களா?”
“ம்ம் சொல்லுங்க”
“உங்க கூட நேர்ல பேசலாமா?”
“இப்பவா?”
மணியை பார்த்தான். இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது அலுவலகம் முடிய.
“ஆமா ஆஃபிஸ்ல இருக்கேன் வாங்க”
“ஓகே”
எழுந்து சென்றான். எதைப் பேச அழைக்கிறாள் என்ற ஊகம் இருந்தது.
கதவை தட்டி விட்டு உள்ளே சென்றான். திரும்பி வந்த இந்த, இரண்டு நாளும் அவளை பார்க்கவில்லை அவன். இப்போது தான் பார்க்கிறான்.
“சொல்லுங்க மேடம்”
“உட்காருங்க”
அவன் அமர்ந்ததும் ஒரு நொடி யோசித்தாள்.
“உங்க பாட்டி எதாவது உங்க கிட்ட சொன்னாங்களா?”
“கல்யாணத்த பத்தியா?”
நேரடியாக விசயத்துக்கு வர, அவளுக்கு அது பிடித்திருந்தது.
“ஆமா. நீங்க என்ன நினைக்கிறீங்க?”
“நான் உங்கள கேட்கலாம்னு இருந்தேன்”
“வெளிப்படையா சொல்லனும்னா, எனக்கு பிடிக்கல”
தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.
“உங்கள பிடிக்கலனு சொல்லல.. இந்த கல்யாணம் தான் பிடிக்கல”
“புரியுது. ஆனா கல்யாணமும் வாழ்க்கையில ஒரு அங்கம் இல்லையா? பண்ணிட்டா தப்பில்லனு என் முடிவு”
“ஆனா.. ” என்று இழுத்தவள், “ஓகே ஓபனாவே பேசலாம்” என்ற முடிவுக்கு வந்தாள்.
“உங்களுக்கு என் ஃபேமிலிய பத்தி நல்லா தெரியும். என் பேரண்ட்ஸ் கேஸும் தெரியும். அந்த மாதிரி ஒரு பொருந்தாத கல்யாணத்த பண்ணி, நானும் கஷ்டப்பட்டு அடுத்தவங்களையும் கஷ்டப்படுத்தி வாழ முடியாது.”
“அப்போ நல்ல பொருத்தமான ஆளா தேடுங்க. உங்க பாட்டி லவ் மேரேஜ்க்கு ஓகே சொல்லுற டைப் தான்”
அவனை இமைக்காமல் பார்த்தவள் முகத்தில் புன்னகை வந்தது.
“நான் அப்ப பொருத்தமில்லையானு கேட்டு சண்டை போட தோணல?”
“என்னை நானே வித்துக்க மாட்டேன் தெரியுமா?”
அவள் கேட்ட அதே தொணியில் அவன் பதில் சொல்ல, ஜாக்ஷி சிரித்து விட்டாள்.
“ஓகே. ஐ கன்ஃபார்ம்ட்”
“என்னனு?”
“உங்களுக்கு என் மேல எந்த லவ்வும் இல்லனு”
“எப்படி?”
“உங்க விக்க மாட்டேன்னு சொன்னீங்களே.. சின்ன ஆர்வம் இருந்தா கூட, இப்படி சொல்ல தோணாது”
அவளை குறுகுறுவென பார்த்தவன், “அப்போ கூப்பிட்டது போட்டு வாங்கவா? மேடம்.. இது டூ மச். நேரா கேட்டுருக்கலாம் நீங்க” என்று கோபத்துடனே கேட்டான்.
“ஆனா அந்த பதில்ல எனக்கு நம்பிக்கை வந்துருக்காது.”
“சரி இப்ப என்ன? உங்க பாட்டி கிட்ட என்னை வேணாம்னு சொல்லிடுங்க. வேலை முடிஞ்சது”
“அத அப்புறம் பார்க்கலாம். இப்ப உங்கள பத்தி சொல்லுங்களேன்”
“எதுக்கு? இப்ப எனக்கு வேலை இருக்கு”
“அத நாளைக்கு பார்க்கலாம். உங்கள பத்தி சொல்லுங்க”
“ரிஜெக்ட் பண்ண ரீசன் வேணுமா?”
“நோ மேன். உங்களுக்கு என்னை பத்தி தெரிஞ்ச அளவு எனக்கு தெரியல. தெரிஞ்சுக்கனும்னு கேட்குறேன். அவ்வளவு தான்”
வீரா தன்னை பற்றி எல்லாம் சொன்னான்.
“அப்போ உங்கம்மாவ விட்டு நீங்களும் பாட்டி கூட தான் வாழ்ந்துருக்கீங்க. என்னை மாதிரி”
“ஆமா. பட் உங்களுக்கு உங்க அப்பா இப்ப தான் இறந்தாரு. என் அப்பா சின்ன வயசுலயே போயிட்டாரு”
“நாம கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கோம்ல?”
“ஆமா.. ஏன்?”
“உங்களுக்கு கல்யாணம் பண்ணுற ஆசை இருக்கா?”
“இப்போதைக்கு இல்ல”
“அப்ப நான் ஒன்னு சொல்லட்டுமா?”
“என்னாது?”
“லிவ் இன்?”
“வாட்? திரும்ப சொல்லுங்க?”
“லிவ் இன் மிஸ்டர் வீரபத்திரன்”
அதிர்ச்சியில் தொண்டை அடைத்து விட்டது.
“என்ன நினைக்கிறீங்க?”
“இது இப்ப டிரெண்ட்னு தெரியும். ஆனா..”
“டிரெண்ட் காக நான் சொல்லல. பொருத்தமா இல்லையானு தெரியாம கல்யாணம் பண்ணிட்டு, வருத்தப்பட்டு டைவர்ஸ்னு வாங்கி பிரியுறத விட, இது பெட்டர் இல்லையா?”
“பட் ரிலேஷன்சிப் வேற. லிவ் இன் வேற.”
“ரிலேஷன்சிப்ல இருக்கது.. நீ உன் வீட்டுல இரு.. நான் என் வீட்டுல இருக்கேன். எப்பவாச்சும் பார்ப்போம். பேசுவோம்”
“சோ?”
“அதுல என்ன தெரிஞ்சுக்க முடியும்?”
“ஆனா இதுலயும் பிரச்சனை இருக்கே. ஒன்னா ஒரே வீட்டுல இருந்தாலும், பிரைவசி இருக்குமே?”
“ஆனா அதையும் தாண்டி நிறைய புரிஞ்சுக்கலாமே. எனக்கு இது பெஸ்ட் ஆப்ஷன்னு தோணுது. நீங்க யோசிங்க”
“அப்போ என்னை பத்தி தெரிஞ்சுக்க உங்களுக்கு விருப்பம்?”
அவள் தலையை ஆட்ட, அவன் யோசனையானான்.
தொடரும்.
(முன்னாடியே சொல்லி சுவராஸ்யத்த கெடுக்க வேணாம்னு தான் சொல்லல. இது லிவ்-இன் காண்சப்ட் கதை. இதுக்கு அப்புறம் வர்ர பல காட்சிகள், உங்களுக்கு பிடிக்காம போகலாம். படிக்க நினைக்கிறவங்க தொடருங்கள். மத்தவங்க விட்டுருங்க. படிச்சுட்டு திட்டுனா பதில் சொல்ல எனக்கு தெம்பில்லை. நன்றி)

Unaga story padika virupam ilanu ellm epome sola matom sis…unga story epo me unikq thn…athe mathiri…ninga epome mugam sukikuramathiri ellm eluthave mathinga…unga writting romba romba naila erukum…atha padichu mudikum bothu enga fece la oru smile varum …athu ellm ungaluku thn…. story soooper a poguthu sis…. thank you for the story
Thank you so much for lovely comments mathi . Ungalukku intha story um pidikum nu namburen . ❤️
🙂