வணக்கம் மக்களே,

உங்களோட எல்லா கேள்விகளுக்கும் இந்த பக்கத்துல பதில் இருக்கும்.

இதுக்கும் மேல அடிக்கடி கேட்கப்படுற கேள்விகளும் கொடுத்துருக்கேன். அதுல உங்க சந்தேகம் தீரலனா எனக்கு மெஸேஜ் பண்ணுங்க.

⚠️⚠️⚠️ WARNING ⚠️⚠️⚠️

சைட்ல வரும் விளம்பரங்கள மறந்து கூட தொடாதீங்க. அது தவறான செயல். ஸ்கிப் பண்ணிட்டு போயிடுங்க.

1. இதுவரை சைட் உபயோகப்படுத்துனது இல்லையா?

வெப்சைட்ல நிறைய வகை இருக்கு. இது என்னோட வெப்சைட். என்னோட கதைகளுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட வெப்சைட். இதுல நீங்க என்னோட கதைகள படிக்கலாம். இதுல இருந்து கதைகள எடுக்கவே மாட்டேன். உங்களுக்கு பிடிச்சுருந்தா லைக் பண்ணலாம் கமெண்ட் பண்ணலாம். கமெண்ட் பண்ண மட்டும் நீங்க சைட்ல உங்களுக்கான ஒரு கணக்க உருவாக்கனும்.

சைட்டோட முகப்புல “வலது பக்கம்” மூன்று கோடுகளோட “Menu” இருக்கும்.

அதுல உங்களுக்கான கணக்குகள உருவாக்கிக்கலாம். “Register” ஆப்ஷன தொட்டா அதுல உங்க “பெயர் மற்றும் இ-மெயில்” கேட்கும். படிவத்த நிரப்புனதும் உங்க கணக்கு உருவாகிடும். இதுல எதாவது சந்தேகம் இருந்தா நான் கொடுத்துருக்க விளக்கப்படங்கள பார்த்துக்கோங்க.

2. சைட்ல கதை படிச்சுருக்கேன். ஆனா இந்த சைட் புதுசு. இதை பத்தி விளக்கம் வேண்டுமா?

இந்த சைட் என் கதைகளுக்காக உருவானது. மற்றவர்கள் கதைகள போடுற அளவு நான் வளரல. அப்படி யாருக்காவது கதை போட விருப்பமிருந்தா எனக்கு நீங்க மெயில் பண்ணலாம். Email : ha********@***il.com

இந்த சைட்ல மூன்று விதமான கதைகள் இருக்கும். Subscriber special, For all & Offer stories. இது மூன்றை பற்றியும் விளக்கம் தனித்தனியா கொடுத்துருக்கேன். பார்த்துக்கோங்க.

3. இந்த சைட்ல இருக்க ஒவ்வொரு கதையையும் வாசிக்கிறத பத்தின விளக்கம் தேவைப்படுதா?

“Subscriber special” கதைகள வாசிக்கனும்னா அதுக்கு நீங்க ஒரு மாத ப்ரீமியம் வாங்கியாகனும். 30 நாட்களுக்கு ரூபாய் 39/- மட்டும் தான். அந்த ஒரு மாசத்துல நீங்க இருக்க அத்தனை கதைகளையும் படிக்கலாம்.

“For all” கதைகள் இலவசமா இருக்கும். அது எப்பவும் சைட்ல தான் இருக்கும். ஆன்கோயிங் கதைகள லாக் இன் பண்ணவங்க மட்டுமே படிக்க முடியும். முடிந்த கதைகளுக்கு லாக் இன் தேவையில்லை.

“Offer stories” இதுல வர்ர கதைகள் குறிப்பிட்ட அறிவிப்போட தான் வரும். கிட்டத்தட்ட பரிசு கதைகள் மாதிரி. அதுல இருக்கிற கதைகள் பத்தின மேலும் விவரங்கள் வேணும்னா எனக்கு மெஸேஜ் பண்ணுற ஆப்ஷன் இருக்கு. அதுல கேட்டுக்கலாம். கீழ இருக்க படத்துல தெரியுற நீல நிற பட்டன தட்டி மெஸேஜ் பண்ணுங்க

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்.

1. சைட்ல சில கதைகள் எனக்கு ஓபன் ஆகல?

ஒரு முறை “Login” பண்ணி செக் பண்ணுங்க. அப்பவும் ஓபனாகலனா எனக்கு மெஸேஜ் பண்ணுங்க. லாக் இன் பண்ணாலே கதைகள் வந்துடும்.

2. குறிப்பிட்ட கதைய எப்படி படிக்கிறதுனு தெரியல?

அந்த கதைக்கான அறிவிப்பு எதாவது வந்துருக்கானு முதல்ல பாருங்க. அப்படி வந்திருந்தா அதுலயே விளக்கம் கொடுத்துடுவேன். எந்த அறிவிப்பும் இல்லனா நீங்க என் கிட்ட நேரடியா கேட்கலாம்.

3. என்னால ப்ரீமியம் வாங்க முடியல?

பணம் கட்டியும் கதை ஓபன் ஆகலயா? இல்லை பணம் கட்டவே முடியலனா சர்வர் பிரச்சனையா இருக்கும். கொஞ்ச நேரம் காத்திருந்து திரும்ப முயற்சி பண்ணுங்க கிடைச்சுடும்.

4. ப்ரீமியம் கதைகள் இலவசமா கிடைக்குமா?

கிடைக்கும். அதுவும் குறிப்பிட்ட நேரத்துக்கு தான் இருக்கும். அப்படி நான் இலவசம் கொடுத்தா அதுக்கு முன்னாடியே அறிவிப்பு கொடுத்துடுவேன். சைட்லயோ இல்ல பிரதிலிபி ஆப்லயோ கண்டிப்பா அறிவிப்பு வந்துடும். ஆனா இது அடிக்கடி நடக்காது. எப்பவாவது நடக்கும் போது மறக்காம கவனிச்சு படிச்சுடுங்க.

5. offer stories படிக்கிறது எப்படி?

அந்த கதைகள் குறிப்பிட்ட சிலருக்கு தான் படிக்க அனுமதி இருக்கும். அவங்க யாருனு நான் நிறைய அறிவிப்புல சொல்லிருக்கேன். இப்போ இருக்க கதைல ஒன்று, “மனதோடு நிற்கின்றாள்” அந்த கதை சைட்ல “மூன்று முறை ப்ரீமியம்” சப்ஸ்க்ரைப் பண்ணவங்க மட்டுமே படிக்க முடியும். நீங்க மூன்று தடவ பண்ணிட்டா எனக்கு மெஸேஜ் பண்ணுங்க. உங்களுக்கு அந்த கதை திறந்துடும். “ஏனோ காதல்” கதை.. என்னோட பேப்பர் புத்தகம் வாங்குனவங்களுக்கு மட்டுமே. நீங்க வாங்கினா எனக்கு புத்தகத்தோட உள் பக்கத்த படம் எடுத்து அனுப்புங்க. கதைய படிக்கலாம்.

6.சைட்ல log in பண்ணுறது எப்படி?

முகப்பு பக்கத்துல மூன்று கோடுகள் “Menu” இருக்கும். அத தொட்டா “Login” இருக்கும். அதையும் தொட்டு லாக் இன் பண்ணிக்கலாம். (புதிய ஆன்ட்ராய்டு ஃபோன்களுக்கு அடிக்கடி லாக் இன் தேவைப்படாது. பழைய ஃபோன்களுக்கு அடிக்கடி நீங்களே பண்ணிக்கிற மாதிரி தான் இருக்கும்)

7. சைட்ல ரிஜிஸ்டர் பண்ணுவது எப்படி?

முகப்பு – Menu – Login பக்கத்துல ஒரு குறி இருக்கும். அத தொட்டா கீழ “Register” இருக்கும். அதுல போய் பண்ணிக்கலாம்.

8. அட்மினுக்கு மெஸேஜ் பண்ண முடியுமா?

பண்ண முடியும். முகப்புல கீழ் பகுதில ஒரு நீல நிற பட்டன் இருக்கும். அதுல நீங்க எனக்கு நேரடியா மெஸேஜ் பண்ணலாம்.

9. எத்தனை மணி நேரத்துக்குள்ள எனக்கு பதில் கிடைக்கும்?

ஞாயிற்றுக்கிழமைய தவிர மற்ற நாட்கள்ல சீக்கிரமே பதில் வந்துடும். நானும் சீக்கிரமா பதிலளிக்க முயற்சி பண்ணுறேன்.

10. எனக்கு வேறு கேள்விகளும் உண்டு.

தராளமா உங்க கேள்விகள கேளுங்க. என் கிட்ட நேரடியா மெஸேஜ் பண்ணி கேட்கலாம். இல்லனா மெயில் பண்ணலாம். அதுவும் இல்லனா சைட்டோட இறுதில என்னோட எல்லா வகையான சமூக வலைதள கணக்கோட லின்க்கும் இருக்கும். உங்களுக்கு எது சரி வருமோ அதையும் பயன்படுத்தலாம்.

Bonus: Chrome menu ல “Add to home screen” ஆப்ஷன தொட்டு “install” பண்ணிட்டா சைட்ட நீங்க “App” மாதிரி பயன்படுத்தலாம். இதுல சந்தேகம்னா மெஸேஜ் பண்ணுங்க. எப்படி அத சரியா பண்ணுறதுனு சொல்லித்தர்ரேன்.