Episode 11

Loading

ராம் குடும்பமும் விடை பெற்று சென்று விட, சுலோக்ஷனாவின் முகம் சோகத்தை சுமந்தபடியே இருந்தது. அவளை அழைத்து சென்று மெத்தையில் அமர வைத்த செழியன், “நீ கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடு” என்று கூறி வெளியேறினான்.

திரும்பி மெத்தையை பார்த்தாள். அதில் அந்நிய தன்மை தெளிவாக தெரிந்தது. தன்னுடைய அறை தன்னுடைய மெத்தைக்கு மனம் ஏங்க, எங்கே அழுதுவிடுவோமோ என்று முகத்தை மறைத்துக் கொண்டாள்.

சிறிது நேரம் அப்படியே அமர்ந்தவள் உடலை குறுக்கி மெத்தையில் படுத்துக் கொண்டாள். தூக்கம் வரவில்லை. ஆனால் கண்ணை மூடி படுத்து இருப்பது மனதுக்கு இதமாக இருந்தது.

மாலை கடந்து இரவு வந்து சேர, அறைக்குள் நுழைந்த சில பெண்கள் அவளை மீண்டும் அலங்கரித்தனர். எதோ நினைவில் இருந்தவள் அவர்கள் சொன்னதை செய்தாளே தவிர, ஏன் என்று யோசிக்கவில்லை. பால் டம்ளர் கைகளுக்கு வரும் போது தான் நிலைமை உரைத்தது. அவள் அதிர்ந்து நிற்க நேரம் கொடுக்காமல், அலங்கரிக்கப்பட்ட செழியனின் அறைக்குள் அனுப்பி விட்டுச் சென்று விட்டனர்.

உண்மையில் அடுத்து என்ன? என்று அவளால் யோசிக்க முடியவில்லை. மூளை மரத்து போனது. அறையில் வந்த பலவித மலர்களின் மணம் வேறு மூச்சடைக்க செய்தது. பேந்த பேந்த முழித்துக் கொண்டு நிற்க, “என்ன சனா ஏன் அப்படியே நிக்குற?” என்று கேட்டுக் கொண்டே ஒரு கதவை திறந்து கொண்டு செழியன் வந்தான்.

குளியலறையாக இருக்கலாம் என்று அவள் யோசித்தாளே தவிர, அவனது கேள்விக்கு பதில் சொல்ல வில்லை.

“இது என்ன பால்? உனக்கு தான் பிடிக்காதே?” என்று கேட்க, அப்போது தான் சுலோக்ஷனா என்ற சிலைக்கு உயிர் வந்தது.

“அ… அது.. உ.. உங்களுக்கு தான்” என்று திணறியபடி பதில் சொல்ல, “ஓகே” என்றவன் வாங்கி குடிக்க ஆரம்பித்தான். அவளை அழைத்து சென்று மெத்தையில் அமர வைத்தவன் பக்கத்தில் அமர்ந்து பொறுமையாக குடித்தான்.

உயிர் பெற்ற சிலை இப்போது யோசிக்க ஆரம்பித்தது. உடனே இந்த உறவை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? ஆனால் அவனுக்கு விருப்பம் இருந்தால்? எனது விருப்பமும் இருக்க வேண்டுமல்லவா? அதை மதிப்பானா?

கேள்விகளுக்கா பஞ்சம்? மனம் அதன் போக்கில் கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்தது. பதிலை அவன் தான் சொல்ல வேண்டும். எப்படிக் கேட்பது? என்று யோசிக்கும் போதே உடலில் குப்பென வெப்பம் பரவியது. செழியன் தான் ஒரு கையால் அவளை அணைத்து இருந்தான்.

“என்ன யோசனை?” என்று கேட்க அவன் கேட்டது மூளைக்கு சென்று சேர ஒரு நிமிடம் எடுத்தது.

ஒரு வழியாக உள்வாங்கியவள் “அது..இது… இது…” என்று  கேட்க முடியாமல் தடுமாறினாள்.

டம்ளரை வைத்து விட்டு அவள் பக்கம் திரும்பினான்.

“எது?”

“அடி சுனாபானா நீயா இது. நீதானா இது” என்று மனசாட்சி வாயை பிளக்க, சட்டென சுயத்திற்கு வந்தாள்.

தயக்கம் விலகி விட, “இந்த சடங்கெல்லாம் ரொம்ப முக்கியமா?” என்று கேட்டாள்.

“முக்கியம்னு நினைச்சு தான இவ்வளவு பண்ணி இருக்காங்க?” என்று திருப்பி கேட்டான்.

“இப்போவே ஏன்?  கொஞ்ச நாள் போகட்டுமே?” என்று தயக்கமாக கேட்டாள்.

செழியனுக்கு ஏமாற்றமே. காதலித்து கைபிடித்தவன் அல்லவா. ஆனால் அவளுக்கு பிடிக்காதே. இவ்வளவு நேரம் இதை மறந்து இருந்தவனுக்கு, அவள பேச்சு ஞாபகப்படுத்தி விட, அவள் தோளின்  மீதிருந்த கையை எடுத்துக் கொண்டான்.

சிறிது நேரம் உணர்வுகளை கட்டுபடுத்தியவன் முகத்தை மாற்றி, “நிறைய கதை படிப்பியோ?” என்று புன்னகை முகமாக கேட்டான்.

ஒரு நொடி என்ன கேட்கிறான்? என்று புரியாமல் விழித்தாள்.

புரிந்து கொண்ட பின் அவளையும் மீறி புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

“அப்படி சொல்லல… கொஞ்சம் டைம் எடுத்துக்கலாமே. ரெண்டு பேருக்குமே நல்லது” என்று சொல்லும் போது, அவனுக்கு பெருமூச்சு எழுந்தது.

“சரி தான்.” என்றான் பட்டும் படாமல்.

“ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கோ. அந்த ரூம் ட்ரெஸ் சேஞ்ச் பண்ண தான்” என்று காட்ட, உடனே எழுந்தவள், அவளது இரவு உடையை எடுத்துக் கொண்டாள்.

உடையை மாற்றி விட்டு வந்தவள் நகைகளை கழட்டி வைக்க, செழியன் மெத்தையை சரி செய்து கொண்டிருந்தான்.

சேலையை மடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தவள், அதில் காலை வைத்திருப்பது தெரியாமல் இழுத்து விட தடுமாறினாள்.

“ஹேய் பார்த்து” என்றவன் வேகமாக வந்து சுலோக்ஷனாவின் முதுகை பிடித்து நிறுத்தியவன், கையிலிருந்த சேலையை வாங்கி கொண்டான்.

தடுமாறி விழப்போனவள் அவனது சட்டையை பிடித்து நின்று நிதானித்தாள்.

“மடிக்க தெரியலனா விட வேண்டியது தான” என்று கேட்டுக் கொண்டே, திரும்ப இருவரது முகமும் வெகு அருகில் வந்ததிருந்தது.

உடை மாற்றியதால் லேசாக கலைந்திருந்த முடி, அதன் நடுவில் காலையில் அவன் வைத்து விட்ட குங்குமம், கீழே குட்டியாக புருவங்களுக்கு மத்தியில் கல் பொட்டு, தன்னை இமைக்காமல் விழுங்குவது போல் பார்க்கும் கண்கள், லேசாக சிவந்து போன நாசியுடன் ரோஜா நிறத்தில் சிவந்து இருந்த கன்னங்கள்.

தன்னையும் மீறி அந்த கன்னத்தில் விரலால் கோலம் போட, அவளது கண்ணம் மேலும் சூடேறி சிவந்தது. அவளும் அவளது முகத்தை தான் அணுஅணுவாக ரசித்துக் கொண்டிருந்தாள்.

இறுதியில் இருவருமே உதட்டில் வந்து நிலைத்தனர்.

‘இந்த உதடு நம்மை முத்தமிட்டால் எப்படி இருக்கும்?’ என்று தன்னையறியாமல் யோசித்து விட்டு உடனே அதை நினைத்து வெட்கத்தில் உதட்டை கடித்தாள்.

அவனது யோசனை, ‘இவளது உதட்டை சுவைத்தால் தித்திக்குமோ?’ என்று இருந்தது.

அவள் உதட்டை கடிக்க, கன்னத்தில் இருந்த விரலை கொண்டு அதை மெல்ல விடுவித்தான். பல்லின் அணைப்பில் இருந்து விடுபட்ட உதடுகள் துடிக்க, அதற்கு ஆதரவாக தன் உதட்டால் அணைத்துக் கொண்டான்.

மெல்ல தான் ஆரம்பித்தான். அதற்கே.அவள் நடுங்க தொடங்கினாள். முதுகில் இருந்த கை தளர்ந்து இடையில் வந்து நிற்க, தன்னோடு சேர்த்து அணைத்தான். உடல் நடுக்கம் குறைந்து அவனோடு ஒன்றி நின்றாள்.

பல மணி நேரமோ? மாதமோ? வருடமோ? எவ்வளவு நேரம் நீடித்ததோ? சுலோக்ஷனா மூச்சிற்கு திணற ஆரம்பித்தாள். அதை உணர்ந்தவன் உதட்டை விடுவிக்க, ஆழ மூச்செடுத்தாள். உடனே செழியன் நன்றாக அணைத்து முதுகை தடவி கொடுக்க, மெல்ல சமநிலைக்கு வந்து விட்டாள்.

தொலைந்த உணர்வுகள் மீட்கப்பட, அவனது அணைப்பிலிருந்து விலகி தலை குனிந்து நின்றாள். செழியனுக்கு தன் தவறு நன்றாக புரிந்தது. சரி என்று சொல்லி விட்டு இப்போது முத்தமிட்டால் என்ன நினைப்பாள்? சொன்ன சொல் காப்பாற்றதவன் என்று நினைத்து விட்டால்?

“சாரி. எதோ… ஒரு” என்று தடுமாறியவன், தலையை அழுந்த கோதி தொண்டையை கணைத்து குரலை சரி செய்தான்.

“இனிமே இப்படி நடக்காது. நீ தூங்கு” என்றான் உறுதியான குரலில். அவனுடைய எந்த பேச்சுக்கும் அவள் தலை நிமிர்த்தவில்லை. மெல்ல மெத்தையின் மறுபக்கம் சென்று படுத்துக் கொண்டாள்.

செழியனும் விளைக்கை அணைத்து விட்டு விட்டத்தை பார்க்க, மெல்லிய வெளிச்சத்தில் அவன் உருவம் வரிவடிவமாக தெரிந்தது. தன்னை மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சுலோக்ஷனா.

உள்ளம் குறுகுறுக்க செழியன் திரும்பி பார்த்தான். சட்டென அவன் திரும்பியதில் ஒரு நொடி விழித்தவள், வேகமாக மறுபக்கம் திரும்பி படுத்துக் கொண்டாள்.

திரும்பும் போது லேசாக தெரிந்த அவளது முகச்சிவப்பு அவனை எதோ செய்தது. போர்த்தியிருந்த போர்வையால் முகத்தை மூடியவள், ‘அய்யோ அய்யோ இப்படியா பார்த்து வைப்பேன். பார்த்துட்டானே… என்ன நினைப்பானோ’ என்று மனதில் புலம்பிக் கொண்டிருந்தாள்.

சட்டென வலிய கரம் ஒன்று அவளை வயிற்றோடு உள்ளிழுத்தது. மெத்தையில் ஓரத்தில் விழுந்து விடுவது போல் படுத்து இருந்தவள், ஒரே இழுவையில் நடுப்பகுதிக்கு சென்று விட்டாள்.

அவள் கையை வயிற்றோடு அணைத்த செழியன் தூங்க தொடங்கினான். சுலோக்ஷனா தான் தனக்கு குறுக்காக விழுந்திருந்த கையை வெறித்து பார்த்தாள். பாராமாக தான் இருந்தது. ஆனால் பாரம் தெரியாமல் உடல் குறுகுறுத்தது.

பின்னாலிருந்து அணைத்திருப்பவன் தூங்கி விட்டானா? இல்லையா? என்று தெரியவில்லை. மெல்ல நெளிந்தாள்.

“ப்ச்ச்.. தூங்கு சனா” என்றான்.

காதுக்கு அருகில் கேட்க குரலில் தடுமாறிய இதயம் படுவேகமாக துடித்தது.

‘தூங்குனு சொல்லிட்டு கைய இப்படி போட்டா எப்படி தூக்கம் வரும்?’ என்று மனதிற்குள் தாளித்தாள்.

“கையை எடுத்து விடு” என்று மூளை சொன்னாலும், அதை ஏற்று செயல்படும் நிலையில் சுலோக்ஷனா இல்லை.

புது இடம் புது குறுகுறுப்பு எல்லாம் சேர்ந்து, அவள் தூங்குவதற்குள் நள்ளிரவு தாண்டி விட்டது.

*.*.*.*.*.*.

காலையில் தன் கையில் இருந்த செய்தித்தாளை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார் கருணாகரன். பார்க்கப் பார்க்க தான் முட்டாளாக்கபட்டது போல் தோன்றியது. தலைப்பு செய்தியாக, செழியனின் திருமணம் தான் இருந்தது. அதுவும் பக்கத்தில் ராம் ரகு குடும்பத்தோடு நின்றிருந்தனர்.

ராம் உரிமையாய் செழியனின் தோள் மீது கை போட்டு நிற்க, அதை அழகாக படம் பிடித்து நாளிதழ்களில் வெளியிட்டு விட்டனர். கருணாகரனுக்கு கொதித்தது.

கருணாகரன் ஊட்டியில் தேயிலை காபி போன்ற பொருட்களை விளைவித்து, அதை ஏற்றுமதி செய்வதில் சிறந்த இடத்தில் உள்ளார். அவரது தொழில் எதிரி என்றால் அது ராஜாராம் தான். எந்த ஒரு இடத்திலும் இவரது பணம் பேசும் முன், ராஜாராமின் தரம் பேசி விடும்.

பல டெண்டர்கள் அவனது கைக்கு தானாக சென்று சேரும் போது, மனதில் வன்மம் தான் பிறக்கும். இதில் அன்பு செல்வத்துடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதை அவரால் நம்ப முடியவில்லை.

மூன்று வருடத்திற்கு முன்னால் தனக்கு கிடைக்க வேண்டிய மிகப்பெரிய டெண்டரை, அவன் தட்டி விட்டது அவர் மனதில் குரோதத்தை கிளப்பி இருந்தது. ராமை அழிக்க எவ்வளவு முயற்சி செய்தாலும், அதில் அவருக்கு கிடைப்பது என்னவோ பயங்கரமான தோல்வி தான்.

இதில் ரகு வேறு. அண்ணனை விட்டு அகல மாட்டான். இருவரும் சேர்ந்தால் அவர்களது பலம் அளப்பரியது. சிகரம் வைப்பது போல் இப்போது ராமின் கம்பெனியும் அன்பு செல்வத்தின் கம்பெனியும் இணைந்து இருக்கிறது.

அன்பு செல்வம் அவர்களது தொழிலில் சிம்ம சொப்பனம். அவரை பார்ப்பது கூட பலருக்கு கிடைக்காத வரம். உணவு பொருட்கள் தயாரிப்பு ஏற்றுமதி இறக்குமதி என எல்லா வகையிலும் கொடிகட்டி பறப்பவர். அவரது தொழிலில் போட்டி என்று எவனும் நிற்க முடியாது.

அவருடைய மகனது பொறுப்பில் தான் சூப்பர் மார்கெட் மொத்தமும் இருக்கிறது. தந்தையும் மகனும் உச்சத்தை தொட்டிருப்பவர்கள். அவர்களை பார்ப்பது பேசுவதெல்லாம் கருணாகரனுக்கு கனவில் தான் கிடைக்கும்.

அப்படிப் பட்ட குடும்பத்தில் ஒருவனாக, வீட்டில் தங்கி திருமணத்தில் கலந்து கொண்ட தன் எதிரியை வெறித்து பார்த்தார். தன்னால் ராமை ஒன்றும் செய்ய முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கிய போதும், அதை ஏற்றுக் கொள்ள தான் முடியவில்லை.

எதாவது செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்க, அவரது மகன் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.

“என்ன ப்பா ? பேப்பர முறைச்சுட்டு இருக்கீங்க?” என்று கேட்டவன், “பவி” என்று குரல் கொடுத்தான். அடுத்த பத்தே வினாடிகளில் அவன் முன் காபியோடு நின்றிருந்தாள் பவித்ரா. அவனது மனைவி.

அதை எடுத்துக் கொண்டவன், அவளை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

“உங்கள தான்பா கேட்டேன்” என்றான் அழுத்தமாக.

“இத பாரு” என்று செய்தித் தாளை மகனுக்கும் காட்டினார். அதை பார்த்தவன் நெற்றியில் முடிச்சு விழுந்தது.

“இவன் தான் ராஜாராம். இது அவன் மொத்த குடும்பம். இவன் அன்பு செழியன் அன்பு செல்வத்தோட பையன்” என்றார்.

இருவருமே வேறு வேறு மனநிலையில் அந்த செய்தித் தாளை பார்த்துக் கொண்டிருந்தனர்.

“கரன் என்னோட பெரிய எதிரி இவன் தான். இவன மட்டும் எதுவுமே பண்ண முடியலடா. அத நினைச்சா தான் கோபம் கோபமா வருது. எதாவது பண்ணனும்டா” என்றார் கருணா.

மகன் கரனுக்கு தொழில் வேறு. அவனது தொழில் வாசனை பொருட்கள் சம்பந்தபட்டது. அவனுக்கு எதிரி விரேந்திரன்.

(ராமின் எதிரிக்கு பையன் விரேந்திரனுக்கு எதிரி…)

இதில் இன்னொரு கொடுமை, கரன் சுலோக்ஷனாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான். காரணம்… அவனது கருப்பு பக்கம் சிக்கி இருப்பது அவளிடம் தான்.

“என்ன கரன் என்ன யோசனை?” என்று கேட்ட தந்தையிடம், மறுப்பாக தலையசைத்தான் தினகரன் எனும் தீனா.

எதிரிகளின் ஆட்டத்தில் பலியாகபோவது யாரோ…?

Leave a Reply