சித்திரமே 32
![]()
வீலென்று அலறி கண்ணை மூடிய அடுத்த நொடி, கண்ணை திறந்த மித்ரா இருட்டு அறையில் இருக்க, உள்ளங்கையால் கண்களை மூடிக் கொண்டு மூச்சு வாங்கினாள்.
உயிர் பயம் யாருக்குத்தான் இருக்காது? அவளுக்கும் இருந்தது. ஆழ மூச்செடுத்து தன்னை நிதானபடுத்திக் கொண்டிருக்க, பின் தலையில் பட்டென ஒரு அடி விழுந்தது.
திடுக்கிட்டு திரும்பியவள், “எதுக்கு அடிச்ச?” என்று எகிறினாள்.
வெண்பனி தான் அவளை அடித்திருந்தாள்.
“லூசா நீ? இப்படி உளறி வச்சுருக்க?” என்று வெண்பனி எகிற, “இப்ப நான் தான் உன் மேல கோபப்படனும். உனக்கு என்னை கொல்லனும்னா கார் ஆக்ஸிடென்ட் தான் கிடைக்குமா? எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா?” என்று மித்ரா எகிறினாள்.
“அப்படியே போட்டேன்னா..” என்று மீண்டும் கையை ஓங்க, மித்ரா முகத்தை சுருக்கினாள்.
கதையில் யாராவது இப்படி கை ஓங்கி இருந்தால், கையை உடைத்து விடுவாள். வெண்பனியிடம் மட்டும் முகத்தை சுருக்கினாள்.
“எவ்வளவு உளறி வச்சுருக்க நீ? உலகத்த விட்டே போகப்போறேன்னு சொல்லுற.. உன்ன..”
“அதான் சமாளிச்சுட்டேன்ல?”
“சமாளிச்சு கிழிச்ச.. உலகத்த விட்டு போகப்போறேன்னு உளறிட்டு, அப்புறமா இல்ல இல்ல உன் உலகத்த விட்டு போறேன். ஃபாரின் போறேன்னு சமாளிக்கிற. இவ்வளவு கேவலமா எவனும் சமாளிக்க மாட்டான்”
“அது எதோ ஃப்ளோல வந்துடுச்சு. அதான் எப்படியோ மேனேஜ் பண்ணி ஃபாரின் போறேன்னு சொல்லி விக்ரம சுத்தல்ல விட்டேன்ல? அவனும் நம்பிட்டான். ஏன் உன் ரீடர் நம்பலயா?”
“நம்புனாங்க. ஆனா.. வெண்பனி எழுதுனா அதுல காரணம் இருக்கும்னு நம்புனாங்க.நீ உளறி வச்சப்போ அப்படியே அழிச்சுட்டு மாத்தி எழுதலாம்னு பார்த்தேன். ஆனா உன்னை ஃப்ரீயா விடுவேன்னு சொல்லி வாக்கு கொடுத்துட்டேனே. அதான் நீ கேவலமா சமாளிச்சத கூட எழுதி தொலைச்சேன்”
மித்ரா நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு, “விடுமா.. எதோ ஒரு வாட்டி தெரியாம பண்ணிட்டேன்” என்றாள்.
“ஒரு வாட்டியா? அடிங்க.. விக்ரம் எதாவது சொன்னா சரி சரினு தலையாட்டி அவனுக்கு பதில் சொல்லி இருக்கனும் நீ. அத விட்டுட்டு, எல்லாமே தெரியும்னு சொல்லுற? அப்படியே நாலு கொட்டு வச்சு தலைய வீங்க வச்சுடுவேன். உனக்கு தெரியுமானு யாராச்சும் கேட்டாங்களா?”
வெண்பனி மேலும் மேலும் முறைத்து தள்ள, “சரி சரி. அதையும் தான் மேனேஜ் பண்ணிட்டேன்ல? சும்மா குதிக்காத” என்றாள்.
“கதை முடியுறதுக்கு முன்னாடி உன்னை க்ளைமேஸ் படிக்க வச்சேன் பாரு.. என்னை சொல்லனும். படிச்சுட்டு கம்முனு போகாம, அங்க போய் கண்டத பேசி உளறி கொட்டி..”
“போதும் ஸ்னோ. அதான் முடிஞ்சுருச்சுல? சும்மா அதையே பேசிகிட்டு. இப்ப எதுக்கு வந்த? அத சொல்லு”
“கொழுப்பு” என்று திட்டி விட்டு, அருகே அமர்ந்தாள்.
“ஒரிஜினல் சித்தாரா அங்க போயிட்டாளா?”
“போயிட்டா போயிட்டா”
“பாவம் அவ. ஒரு செகண்ட் அங்க இருந்ததுக்கே பயந்து செத்துட்டேன். அந்த சித்தாரா என்ன செய்ய போறாளோ?”
“அது க்ளைமேக்ஸ்ல தெரியும்”
“ஓஓஓ.. அது இன்னும் எழுதி போடலயா?”
“இல்ல. இப்ப சும்மா உன் கூட பேசலாம்னு வந்தேன்”
“பேசவா?”
“இன்னைக்கு முழுக்க பேச்சு தான். உனக்கு எதாவது தெரியனும்னா கேளு”
“ஹேய்.. இந்த ஆஃபர் எனக்கு பிடிச்சு இருக்கு. நிறைய கேட்கனும்னு இருந்தேன்”
“கேளு. பதில் சொல்லுறேன்”
“முதல்ல நீயெல்லாம் கதை எழுதலனு யார் அழுதா?”
இந்த கேள்வியை மித்ரா கேட்டதுமே, வெண்பனி சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
“சிரிக்காத பதில் சொல்லு”
“என் ரீடர்ஸ் தான். அவங்க தான் கேட்டாங்க. கதை எழுத சொல்லி”
“உன் ரீடர்ஸ்க்கு டேஸ்ட்டே இல்லயா? உன் கதைய போய் படிக்குறாங்க?”
“கொழுப்பா? அவங்கள எதாச்சும் சொன்ன பிச்சுடுவேன்”
“ரொம்பத்தான். சரி இத விடு. இந்த கதைக்கு ஏன் சித்திரமே சிதைவதேனோனு பேர் வச்ச?”
“இந்த கதையோட முழுப்பெயர் “வெண்பனி சிதறல்களின் சித்திரமே சிதைவதேனோ” ரீடர்ஸ் யாருமே கவர நோட் பண்ணாததால வெறும் சித்திரமே சிதைவதேனோ தான் டைட்டிலா செட் ஆகிடுச்சு. இந்த கதையில ஒரிஜினல் சித்தாரா நிறைய அழுவா. நிறைய வேதனை படுவா. அவ கொஞ்சம் கொஞ்சமா சிதையுற போல ஃப்ளாட். அதான் இந்த டைட்டில வச்சேன். ஆனா நீ மத்த அத்தனை பேரையும் தூக்கி போட்டு உடைச்சுட்டு வந்து நிக்கிற. டைட்டிலுக்கு பொருத்தமே இல்லாம.”
“அவ்வளவு சாஃப்ட் கேர்ளா அவ? பாவம். இனி எப்படி சமாளிப்பா?”
“அவ்வளவு சாஃப்ட் இல்ல. ஆனா.. நீ இருந்த மாதிரி அவளால இருக்க முடியாது”
“ஏன்?”
“நீ பிரச்சனைய மூணாவது ஆளுக்கு நடந்த மாதிரி ட்ரீட் பண்ண. அவளால அது முடியாது. ஏன்னா அவளே மனசளவுல நிறைய பாதிக்கபட்டுருப்பா. எமோசனலா அட்டாச்ட் ஆகும் போது நிறைய சொதப்பல் வரும். அதுக்காக அவள ப்ளேம் பண்ண முடியாது”
“அப்புறம் ஏன் என்னை அனுப்புன?”
“அவளோட சொதப்பல் பிடிக்காம தான். இதுக்கு முன்னாடி படிச்சியே.. அது தான் ஒரிஜினல் கதை. எழுதி முடிச்சப்புறம் எனக்கு பிடிக்கவே இல்ல. திருப்தியே வரல. என்னடா இது.. ஆன்டி ஹீரோ கதைனா இந்த ஹீரோயின் அழுது புலம்பிட்டு தான் இருக்கனுமானு ஒரு எரிச்சல்.
இதுல வேதாவ எதிர்த்து பேசாம, அவள நடுவீட்டுல உட்கார வச்சு பணிவிடை பண்ணிட்டு இருப்பா. விசாகா சின்ன புள்ள எதிர்த்து பேசும் போது, வாய மூடிட்டு நிப்பா. ஆதிரா விக்ரம பங்கு போட வந்தா, கண்ணீர் வடிப்பா. அதெல்லாம் பார்த்து எரிச்சலாகிட்டேன்.
இந்த பொண்ணு எதிர்த்து பேசுற மாதிரி எழுதக்கூட முடியலயேனு தோனுச்சு. அப்ப தான் ஹீரோயினுக்கு பதிலா வேற யாராயாவது போடலாம்னு தோனுச்சு. அப்படியே யோசிச்சு யோசிச்சு இப்ப இந்த கதை எழுதியாச்சு”
“அவளும் நீ படைச்ச ஹீரோயின் தான? ஒழுங்கா படைக்காதது உன் தப்பு தான?”
“மறுபடியும் இப்படி பேசாத. நான் ஏற்கனவே சொல்லிட்டேன். படைக்கும் போது சில பல கஷ்டஙகள், வாழ்க்கையில முக்கியமான சிலத தான் கொடுக்க முடியும். மத்த எல்லாம் அவங்க அவங்க மூளை சொல்லுறத கேட்டு அவங்களா இழுத்துக்குறது. எல்லாத்துக்குமே படைச்சவன குறை சொல்லுறத ஏத்துக்கவே முடியாது”
“உனக்கு கடவுள் நம்பிக்கை அதிகமோ?”
“நிறைய. உன்னை படைச்ச நான் இருக்கேன்னா, என்னை படைச்ச ஒருத்தர் இருப்பாங்கள்ள?”
“நியாயமான கேள்வி தான்.”
“அதுனால எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு.”
“சரி.. நாம கதைக்கு வருவோம். இப்ப சித்தாரா என்ன ஆவா?”
“அதான் சொல்லுறேனே முடியும் போது தெரியும்னு”
“நீ ரெண்டு க்ளைமேக்ஸ் வச்சுருந்தியே.. ஒன்னு சித்தாரா கோமால கிடந்து நாலஞ்சு வருசம் கழிச்சு முழிக்கறது. ரெண்டாவது செத்து போறது”
“ம்ம்”
“இதுல எத எழுதுவ?”
“மூட் பொறுத்து தான். நல்லா பார்த்துட்டு எது சரியா வருமோ அத எழுதிடுவேன்”
“இப்ப சித்தாரா செத்துட்டா என்ன ஆகும்?”
“அவ செத்துட்டா.. விக்ரம் ரொம்ப வருத்தப்படுவான். விதார்த் அம்மாவுக்காக அழுவான். அல்லிக்கு கொஞ்ச நாள் கிடைச்ச சந்தோசம் திரும்ப கிடைக்காது. க்ளைமேக்ஸ்ல விக்ரம் சித்தாரா போட்டோவ பார்த்து மன்னிப்பு கேட்குற மாதிரியும் அவளோட பேரண்ட்ஸ் விக்ரம் கிட்ட பேசுற மாதிரியும் முடியும்”
“அப்ப உயிரோட இருந்தா?”
“உயிரோட இருந்தா அவ கிட்ட நேராவே விக்ரம் மன்னிப்பு கேட்பான். அவளும் கொஞ்சம் கொஞ்சமா மன்னிச்சு அவன ஏத்துப்பா. எபிலாக்னு போட்டு விதுக்கு தங்கச்சி இருக்க மாதிரி இருக்க மாதிரி முடியும்”
“அப்ப தங்கச்சிக்கு என்ன பேரு வைப்ப?”
“தேவசேனா”
“செம்ம.. இதையே எழுதேன். பாவம் விது அம்மா இல்லாம எப்படி இருப்பான்? அதுவும் அல்லி ஆண்ட்டி இப்ப தான் நிம்மதியா இருக்காங்க”
“அப்ப விக்ரம்?”
“அவன் ஒரு லூசு. போனா போகட்டும் அவனும் பொழச்சு போகட்டும்.”
“அவன் லூசா? ஆன்டி ஹீரோமா”
“எனக்கு அவன் லூசு தான். ஆமா.. கேட்கனும்னு நினைச்சேன். இடையில விக்ரம் சேன்ஜ் ஆனானே. எப்படி?”
“உனக்கு ஏத்த வில்லனா இறக்கனும்னு அவன மாத்துனேன். ஆனா நீ அவன நல்லா குழப்பி விட்டுட்டே இருந்த. பாவம் அவன் ஆன்டி ஹீரோ கோபக்காரன்னு எல்லாம் மறந்து முழுக்க முழுக்க குழப்பத்துலயே சுத்துனான்.”
“அவன் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்ல. பட் மத்தவங்க நல்லா இருக்கனும். முக்கியமா விதுவும் அல்லி ஆண்ட்டியும்”
“அவங்க கூட கணெக்ட் ஆகிட்டியா என்ன?”
“அப்படி சொல்ல முடியாது. கொஞ்ச நாள் பழகுன பாசம் இருக்கும்ல? ஒரு ஃப்ரண்ட் மாதிரி. அவங்க ஹாப்பியா இருந்தா நல்லா இருக்கும். அவ்வளவு தான்”
“பார்ப்போம்”
“அப்ப ஹாப்பியா முடிக்கிற ஐடியா உனக்கு இல்லையா?”
“தெரியலமா. யோசிக்கலாம்”
“சரி நீ எழுதும் போது சொல்லு. இப்ப சித்தாரா என்ன செய்வா?”
“ஹாஸ்பிடல் போறதோட நிறுத்தி வச்சுருக்கேன்”
“ஹேய்.. அவ கண்ணு முழிச்சுடானா பெரிய பிரச்சனை வரும்ல?”
மித்ரா புதிதாக பதட்டமாக கேட்க, “என்ன பிரச்சனை வரும்?” என்று வெண்பனி கேட்டாள்.
“நான் கதையில வில்லி. எனக்கு தகுந்த மாதிரி நடந்துக்கிட்டேன். அவ ஹீரோயின். அவளுக்கு ஏத்த மாதிரி இருப்பா. இப்ப அங்க இருக்கவ ஹீரோயின். நான் இருந்த மாதிரி மார்டன் டிரெஸ் ஸ்விம் சூட் எல்லாம் போடுவாளா? இல்ல அந்த பாலாப்போன சுடிதார் சேலைய கட்டுவாளா? ஒரு வேளை சுடிதார் போட்டா, இத்தனை நாள் வேற மாதிரி இருந்தியேனு மத்தவங்களுக்கு சந்தேகம் வந்துடாதா?”
“ஆமால.. நிறைய பிரச்சனை இருக்குல? பேசாம அவள கொன்னுடுவோமா?”
“உனக்கு கொல்லுறது தான் தெரியுமா? ஏன் இந்த பிரச்சனைய மேனேஜ் பண்ணி எழுத மாட்டியா?”
“அதுக்கு நிறைய யோசிக்கனும்ல?”
“மூளை இருக்குல? யோசி. கொல்லுறதுக்கு மட்டும் தான் மூளைய யூஸ் பண்ணுவியோ?”
“ரொம்ப பேசுறாளே.. சரி பார்ப்போம் “
“அப்புறம் எனக்கு அந்த கதையோட க்ளைமேக்ஸ் படிக்கனும்.”
“ஏன்?”
“நான் இருந்த கதை. அதுல சித்தாரா எப்படி வாழுறா? எப்படி முடியுதுனு பார்க்க ஆசை. காட்டுவியா?”
“எழுதனப்புறம் படி. ஆனா அதுக்கு முன்னாடி வேற விசயம் பேசனும்”
“என்னாது?”
வெண்பனி விசயத்தை கூறினாள். மித்ரா கேட்டு விட்டு, “இந்த கதை க்ளைமேக்ஸ் முடிஞ்சப்புறம் இத எல்லாம் பேசலாம்” என்று முடித்து விட்டாள்.
“சரி நான் கிளம்புறேன்.”
“தாங்க்ஸ்”
“எதுக்கு?”
“எல்லாத்துக்கும் தான்”
வெண்பனி புன்னகைத்து விட்டு மறைந்து போனாள்.
வெண்பனி கையில் வைத்து சுழற்றிக் கொண்டிருந்த பேனாவை, பட்டென பிடுங்கினாள் அவளுடைய தோழி.
“என்ன நினைச்சுட்டு இருக்க நீ? எதுக்கு தாராவ கொல்லப்போற?” என்று எகிற, “உஸ்ஸ்.. அமைதியா பேசு” என்று அதட்டினாள்.
“உன்னை வச்சுக்கிட்டு… எதுக்குடி அப்படி பண்ண? ஆக்ஸிடெண்ட் ஆகி கிடக்குறா தாரா. பாவம்”
“அதுக்கு என்ன பண்ணுறது?”
“நீ எதுவும் இனி பண்ண வேணாம். ஒழுங்கா அவள பொழைக்க வை”
“பார்க்கலாம்”
“அடியே.. தாராவுக்கு மட்டும் என்னமாச்சும் ஆச்சு.. உன்னை ஃப்ரண்ட்டுனு பார்க்க மாட்டேன்”
“என்ன செய்வ?”
“கைய பிடிச்சு கடிச்சு வச்சுடுவேன்”
“அப்புறம் எழுதவே மாட்டேன். பரவாயில்லயா?”
“இப்படியே மிரட்டு.. தாரா பொழைப்பாளா மாட்டாளா? சொல்லு”
“அத கதையில படி”
“அது எனக்கு தெரியாதா? உன் கிட்ட கேட்டா சொல்லுடி”
“நீ ஊரெல்லாம் உளறிடுவ. அதுனால ஒழுங்கா படிச்சே தெரிஞ்சுக்க. இப்ப வேலை இருக்கு. கிளம்பு”
“மாட்டேன். ஹாப்பி க்ளைமேக்ஸா? சேட் க்ளைமேக்ஸானு மட்டுமாச்சும் சொல்லு”
“ஏய்.. போடி. வேலை இருக்கு” என்று துரத்தி விட்டவள், வேலையை பார்த்தாள்.
தொடரும்.
இப்ப சந்தேகங்கள் எல்லாம் தீர்ந்ததா மக்களே? இனி கதை முடிவுக்கு போகலாம். அப்புறம் அங்க ஒரிஜினல் சித்தாரா போயாச்சு. மித்ரா இனி அங்க வர மாட்டா. புரியுது தான?
