ராஜா ராணி 3
![]()
அஸ்வினி கொடுத்த வழக்கின் விவரங்களை படித்த கே.பி.பி என்று எல்லோருக்கும் பொதுவாக தெரிந்த புதுமைப்பித்தன் யோசனையில் ஆழ்ந்தார். நிமிர்ந்து அஸ்வினியை பாத்தவர் “இந்நேரம் இந்த கேச க்ளோஸ் பண்ணி இருக்கனும். கைரேகை அண்ட் அந்த வீட்டில வேற யாரும் வந்து போனதுக்கு எந்த அறிகுறியும் இல்லாத போது அந்த திருப்புகழ் தண்டனை அனுபவிச்சு இருக்க வேண்டியது. ஆனா மனநலம் பாதிக்கப்பட்டது இழுக்குது.” என்று யோசனையுடனே சொன்னவர் “ஆர் யூ சுயர். அவன் கொலை பண்ணல னு….” என்று அவர் இழுக்க அவரின் கேள்விக்கு “ஐம் சுயர் சார். இதுல எதோ பொருந்தாத மாதிரி இருக்கு. அப்பா மேல பைத்தியமா இருக்கவன் பணவிசயத்துல அதும் கழுத்த அறுக்குறது கொஞ்சம் பொருந்தாம இருக்கு. எதுக்கும் இன்னொரு தடவை இத கிளறி பார்த்தா க்ளூ கிடைக்கும் ” என்று அஸ்வினி உறுதியாக கூற “சரி அஸ்வினி. நீயே இந்த கேச முழுசா கவனி எதும் ஹெல்ப் னா நான் பார்த்துக்குறேன்.” என்று முடித்து கையில் இருந்த கோப்பை அஸ்வினியின் புறம் நீட்டினார். அதை பெற்றுக் கொண்டு எழுந்த அஸ்வினியை நிறுத்தியவர் ஒரு சில தாள்களை அவள் முன் வைத்தார்.
“இதுல சைன் பண்ணு மா ” என்று கூற அவர் மேல் இருக்கும் நம்பிக்கையில் படிக்காமலே கையெழுத்து போடுவாள் தான். ஆனால் செய்யும் தொழில் அப்படி இருக்க விடாமல் அன்னிச்சையாக மேலோட்டமாக வாசிக்க வைத்தது. படித்த நொடி தலையில் இடி சத்தமில்லாமல் இறங்கிய உணர்வு . அதிர்ச்சி அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிய புதுமைப்பித்தன் மனதில் நிம்மதி பரவியது.
கண்ணெடுக்காமல் அவளையே பார்த்துக் கொண்டு இருக்க அவளோ நிமிட நேரத்தில் தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டாள். மேசையில் இருந்த பேனாவை எடுத்து நிதானமாக கையெழுத்திட்டு கொடுத்து விட்டு நகர்ந்தாள்.
கையெழுத்து போட்டு விட்டாலும் கே.பி.பி யின் மனம் நிம்மதியை இழக்க வில்லை. பத்திரமாக அந்த தாள்களை வைத்தவர் போனில் யாருக்கோ விசயத்தை சொல்லி விட்டு வேலையில் ஆழ்ந்தார்.
தன் இருப்பிடம் வந்து அமர்ந்த அஸ்வினிக்கு தன்னையும் மீறி தொண்டையை அடைத்தது. “எப்படி மனசு வந்துச்சு?. விருப்பமில்லாம நடந்தது தான்.. ஆனா எனக்கு.. நான்.. ” அதற்கு மேல் யோசிக்க முடியாமல் தலையை பிடித்துக் கொண்டாள். கண்ணை மூடி தன்னை தானே அசுவாசப்படுத்திக் கொண்டாள். அவள் துன்பத்தில் உழன்றால் மட்டும் யாரும் ஆறுதல் சொல்லிவிட போகிறார்களா என்ன. விரக்தியாக நினைத்தவள் சொந்த விசயங்களை தள்ளி வைத்து விட்டு தன் அலுவலில் மூழ்கினாள்.
*.*.*.*.*.*.
காலையில் தாமதமாக எழுந்து அறக்க பறக்க அலுவலகம் ஓடும் அனிதா இப்போது நிதானமாக கிளம்பிக் கொண்டு இருந்தாள். தந்தை தனியாக விட்டு சென்றபின் அவளின் தூக்கமும் அவளை வஞ்சித்து விட்டது. வேலைகளை இழுத்து போட்டு செய்து உடல் களைத்து உறங்க தொடங்கினாலும் நான்கு மணிநேரம் கூட முழுதாக தூங்க மாட்டாள். தாமதமாக தூங்கி விரைவாக எழுந்து கொள்ள பழகிக் கொண்டாள். மதிய உணவை டப்பாவில் அடைத்து எடுத்துக் கொண்டு தன் கை பையை தோளில் மாட்டியபடி செருப்பை அணிந்தவளை அபூர்வா மாமி அழைத்தார். “வரேன் மாமி” என்று குரல் கொடுத்தபடியே வீட்டை பூட்டி சரி பார்த்து விட்டு மாமியை நோக்கி நடந்தாள்.
“இந்தாடி மா உங்க மாமா அடை கேட்டுண்டே இருந்தார் னு பண்ணேன். சாப்பிட்டு சொல்லு எப்படி னு ” என்று அனிதா மறுக்க வாயை திறக்கும் முன் அவர் கையில் திணித்து விட்டு “இவாளோட அண்ணன் வீட்டுல சுமங்கலி பூஜை. சாயந்தரம் போயிட்டு வர நாளி ஆகும். பார்த்து பத்ரமா இருந்துக்கோ என்ன ?” என்று அவசரமாக சொல்லிவிட்டு அனிதா வின் தலையை வருடி கொடுத்து விட்டு சென்றார். எப்போதும் போல் இப்போதும் மாமியின் பாசத்தில் நெகிழ்ந்த அனிதா தன் அலுவலகம் நோக்கி புறப்பட்டாள்.
*.*.*.*.*.*.
காலை மணி ஒன்பதை கடந்த பின்னும் ஊட்டியின் குளிர் குறைவதாக இல்லை. மெல்ல மெல்ல தன் ஒளி கரங்களை கதிரவன் மேகத்தின் ஊடே செலுத்திக் கொண்டிருந்ததை ரசித்துப் பார்த்தவாறு ஜாகுவாரில் பறந்து கொண்டிருந்தான் ராஜாராம். சென்னை யில் திருமண வரவேற்பை முடித்து விட்டு ஒரு மீட்டிங்கையும் முடித்துக் கொண்டு கிளம்பி இருந்தான். இயற்கையின் அழகை ரசித்தவாரு வீட்டில் வந்து நின்றான். காரை நிறுத்தி இறங்கி வீட்டில் நுழைய மங்களகரமாக வந்து நின்றார் பரிமளம். ஒரு சிறு புன்னகையை உதிர்த்து விட்டு தீபத்தை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டு நடந்தான்.
பெரிய கடவுள் நம்பிக்கை எல்லாம் அவனுக்கு இல்லை. ஆனால் அன்னைக்கு இருப்பதால் எதிர்த்து எதுவும் பேச மாட்டான். வேகமாக படியேறி அறைக்கு செல்பவனை பார்த்தவரே உள்ளே நுழைந்தார் ராதாரவி. மேலே சென்றவன் குளித்து முடித்து அலுவலகத்திற்கு தயாராகி கீழே வர சுடசுட இடியாப்பத்துடன் பரிமளம் காத்து இருந்தார். உணவு மேஜையில் அமர்ந்தவன் “குட் மார்னிங் பா” என்று காலை வணக்கத்தை சொல்ல “குட்மார்னிங் ராம்” என்றார். “காலெஜ் ல எதுவும் ஹெல்ப் வேணுமா பா. ரெண்டு நாளா டயர்டா தெரியுறீங்க ” என்றவாறு தட்டில் வைத்த இடியாப்பத்தை எடுத்து வாயில் போட்டான். “அதெல்லாம் வேணாம் ராம். நீ உன் வேலைய கவனி. அதுக்கே உனக்கு நேரம் சரியா இருக்கு” என்று சொன்னவர் தனக்கு வைக்கப்பட்டு இருந்த ராகி இட்லியை சாப்பிட ஆரம்பித்தார். ராமின் போன் ஒலி எழுப்ப அதை கையில் எடுத்தவன் ரகுவின் பெயரை பார்த்ததும் ஸ்பிக்கரில் போட்டான். “என்னடா தம்பி பாப்பா. இந்த நேரத்துல போன் பண்ணுற? ” என்று புன்னகையுடன் கேட்க “அண்ணா….” என்று ரகு அந்தப் பக்கம் கத்துவது நன்றாக கேட்டது. பரிமளம் சிரிப்போடு நிற்க “ஆமா டா அண்ணன் தான் சொல்லு” என்று விசயத்திற்க்கு வர “நான் நாளைக்கு வந்து பார்த்துக்கிறேன் உங்கள” என்று பல்லை கடித்துக் கொண்டு கூற “வா வா தம்பி பா…..ப்ப்ப்….பா……..” என்று ராகம் இழுத்தான் ராம். ரகு மீண்டும் கத்துவதற்குள் “வேலை எல்லாம் முடிஞ்சதா ரகு?” என்று ரவி கேட்க “எல்லாம் முடிஞ்சது பா. நாளைக்கு ஈவ்னிங் அங்க இருப்பேன்” என்று பதில் சொன்னான். “எப்போ ஃப்ளைட் ?” என்று ராம் கேட்டதற்கு “அதெல்லாம் நீங்க வர வேணாம் நானே வந்துடுறேன். அப்புறம் பேசுறேன் ஒரு கால் வருது பை” என்று அவசரமாக அழைப்பை துண்டித்து விட்டான். ராம் சிறு புன்னகையுடன் தன் போனை எடுத்துக் கொண்டு அலுவலகம் கிளம்பி விட்டான்.
ரவி யும் மனைவியிடம் சொல்லி விட்டு கல்லூரி சென்று விட்டார்.
*.*.*.*.*.*.
யுவராணி யும் வரதனும் ஒன்றாக ஆதிபரமேசுவரன் வீட்டில் நுழைய “வாங்க வாங்க யுவராணி மேடம்” என்று ஆதிபரமேசுவரன் வரவேற்க அதை அவள் கொஞ்சமும் காதில் வாங்கவில்லை. இருவரும் வந்து அங்கு இருந்த பெரிய சோபாவில் அமர்ந்து கொண்டனர். யுவா அப்போது தான் தன் போனை கீழே வைத்து விட்டு ஆதிபரமேசுவரனை நிமிர்ந்து பார்த்தாள்.
கிட்டத்தட்ட தன் வயதுடைய பிள்ளைகளுக்கு தந்தை என்பதை கொஞ்சம் கூட காட்டாத ஒரு தோற்றம். இளமையாக காட்டிக்கொள்ள பெரும் பாடு பட்டிருக்க வேண்டும். மூக்கு கண்ணாடி கூட வயதை காட்டாத படி அணிந்து இருந்தான். ஆனால் எதிரியாகி போனானே. மதிக்க தோன்றவில்லை யுவா விற்கு. கால் மேல் கால் போட்டு தெனாவெட்டாக அமர்ந்தாள்.
வரதனும் அப்படியே. அதை கண்டு கொள்ளாமல் பரமேசுவரன் தன் மனைவியை அழைத்து வந்தவர்களுக்கு குளிர்பானம் கொண்டு வர சொன்னார். “அப்புறம் மேடம் பிஸ்னஸ் எப்படி போகுது? ” என்று எவ்வளவு முயன்றும் தன் குரலில் நக்கல் வெளிபட்டு விட்டதை அவர் அறியவில்லை. அது ஒன்று போதுமானதாக இருந்தது யுவாவிற்கும் வரதனுக்கும். வந்ததிலிருந்து வரதனை அவர் ஒரு பொருட்டாக கூட மதிக்காதது யுவாவிற்கு கோபத்தை கிளப்பியது. வரதனுக்கு அவர் கவனிக்காததே சாதகமாகி போனது. கண்ணால் அந்த வீட்டை எவ்வளவு அலச முடியுமோ அலசி விட்டான்.
“பிஸ்னஸ்க்கு என்ன ரொம்ப நல்லா போகுது. இப்ப கூட ******* குரூப்ஸோட ரெண்டு டீல்ஸ் எனக்கு வர போகுதே ” என்று நன்றாக சோபாவில் சாய்ந்து கொண்டு யுவா கூற பரமேசுவரனுக்கு எதுவும் புரியவில்லை. யுவா சொல்லும் கம்பெனியின் டீல்கள் இரண்டும் தன்னுடைய பங்குதாரரின் கம்பெனிக்கு தான் கிடைத்து இருந்தது. இவள் தனக்கு கிடைக்க போவதாக சொல்கிறாளே. யுவா பணத்தை கொடுத்து காரியம் சாதிக்கும் ஆள் அல்ல. பின் எப்படி. யோசனையாக அவளை பார்க்க “என்ன புரியலையா?” என்று கேட்க ஆதிபரமேசுவரன் அசராமல் அவளையே பார்த்தார். “உங்க பார்ட்னர்ஸ் கிட்ட சொல்லி இப்போ நீங்க தான் அந்த டீல்ஸ்ஸ கேன்சல் பண்ண வைக்க போறிங்க ” என்று யுவா கூற அதற்கு பதில் பேசும் முன் பரமேஸ்வரன் மனைவி வேலையாள் பின் தொடர குளிர்பானத்தோடு வந்தார். அவர் வைத்து விட்டு செல்லும் வரை எதுவும் பேசவில்லை. மனைவி அகன்றதும் “என்ன மேடம் விளையாடுறீங்களா?. உங்க டீல் வேற கம்பெனிக்கு போனா அந்த கம்பெனில போய் பேசுங்க . என்னால எல்லாம் இத பண்ண முடியாது. ” என்று கறாராக கூற வரதன் சிரித்து விட்டான். “ஹலோ மிஸ்டர் இது ஹெல்ப் இல்ல ஆர்டர்” என்று “ஆர்டர்” க்கு அழுத்தம் கொடுக்க பரமேஸ்வரன் கால் மேல் கால் போட்டுக்கொண்டு “நான் ஏன் செய்யனும்?” என்று திமிராக கேட்டார்.
உடனே யுவா “வரா” என்று இழுக்க “சொல்லு யுவா..” என்று பதிலுக்கு வரதன் இழுத்தான்.
இருவரும் பார்வையை ஆதிபரமேஸ்வரன் மேலே வைத்த படி “இவருக்கு ஒரு பொண்ணு இருக்கே பெயர் என்ன? ” என்று யுவா கேட்க “அதுவா. .. தீபிகா… **** காலெஜ் ல பி.இ முதல் வருசம் படிக்குதே… ” என்றுஆரம்பித்து இன்னும் பல தகவல்களை வரதன் சொல்ல ஆதிபரமேஸ்வரன் ஆடிப் போனார். “ஏய் என்ன மிரட்டுறீங்களா?” என்று முதல் முறையாக கோபத்தை காட்ட வரதன் நக்கலாக சிரித்தான். யுவா தன் கையை திருப்பி பார்த்து விட்டு ” இப்ப உங்க மக காலெஜ் கிளம்புற நேரம் தான்” என்று முடிக்க பரமேஸ்வரனின் மகள் அறையில் இருந்து வெளியில் வந்தாள். ஹாலில் இருந்த தந்தையை கண்டு கொள்ளாமல் அவள் வெளியேற “ஏன் யுவா அப்பா மேல இந்த பொண்ணுக்கு ரொம்ப பாசம் போல?” என்று வரதன் கேட்க “அதெல்லாம் தெரியாது ஆனா இவருக்கு இவர் பையன் மேல ரொ….ம்ம்ம்ம்ப…… பாசம்” என்று யுவா பதில் கூறினாள்.
“என்ன சார் பையன் நல்லா இருக்கானா?” என்று கேட்டு விட்டு “உங்க பையன் இப்போ எங்க இருக்கான் தெரியுமா **** பார் ல.. பட் இந்த நிமிஷம் அவன் அங்க இல்ல . வேணும்னா உங்க பையனோட ப்ரண்ட் கிட்ட கேட்டு பாருங்களேன்” என்றவன் பரமேஸ்வரன் போனை எடுத்து அதில் இருந்த நம்பர் பூட்டையும் திறந்து ஒரு எண்ணை அழுத்தி அவரின் புறம் நீட்டினான்.
பரமேஸ்வரன் அரண்டு போனார். தன் போனில் உள்ள பாதுகாப்பு எண் வரை தெரிந்து வைத்து இருக்கிறார்கள் என்றால்… அதற்கு மேல் யோசிக்க முடியாமல் போனை அவர் கையில் திணித்தான் வரதன். அதை காதில் வைத்தவர் “நான் தீபக் அப்பா பேசுறேன். தீபக் உன்கூட இருக்கானா” என்று பதட்டத்தை மறைத்து கேட்க “இப்போ தான் அங்கிள் நீங்க அனுப்பின ஆள் கூட்டிட்டு போனார்.” என்று அந்த பக்கம் பதில் வர இவருக்கு பக்கென்றது. எதையோ பேசி விட்டு போனை கீழே வைத்தார். “உன் ஆளு ஒருத்தன் என் கிட்ட மாட்டி சின்னா பின்னமாகி எல்லா உண்மையையும் சொல்லிட்டான்” என்று யுவா சொல்ல “சோ இப்ப நீங்களா டீல் கான்சல் பண்ணுவீங்க னு நினைக்குறேன்” என்று வரதன் முடித்தான்.
“தப்பு பண்ணுறீங்க” என்று எச்சரித்தார். அவர்கள் அதற்கு அசையாமல் இருக்க போன் செய்து டீல்களையும் கேன்சல் செய்ய சொல்லிவிட அடுத்த பத்து நிமிடத்தில் அந்த டீல் யுவா வின் கம்பெனிக்கு கிடைத்தது. அதன் பிறகே இருவரும் கிளம்பினர். “இன்னும் பத்து நிமிசத்துல உங்க பையன் வீட்டில இருப்பான்” என்று சொல்லியபடி தன் கூலரை மாட்டிக்கொண்டு வரதன் வெளியேறினான். சொன்னபடி பத்து நிமிடத்தில் அவர் மகன் வந்து சேர்ந்தான். எந்த சேதாரமும் இல்லாமல். அவனை கடத்தவும் இல்லை . சிறிது நேரம் அங்கும் இங்கும் அலய விட்டு விட்டு பிறகு காரை இவனிடம் தந்து விட்டு சென்று இருக்கின்றனர்.
சின்ன மிரட்டலில் பயந்து இப்படி கோட்டைவிட்டது அவமானமாக இருந்தது. அவை ஒன்றும் சின்ன டீல்கள் இல்லையே. பல ஆயிரம் கோடி புரளும் வேலைகள். எவ்வளவு கஷ்டப்பட்டு காரியத்தைச் சாதித்தார். கடைசியில் இப்படியா விட வேண்டும். அவர்கள் போன் பாதுகாப்பு பூட்டை உடைத்தது ஒரு பக்கம் பயத்தை கிளப்ப தனக்கு கூட தெரியாத தன் மகள் கல்லூரி செல்லும் நேரத்தை அவர்கள் சொல்லியது அவமானமாக இருந்தது. இதில் பிடிபட்டவன் வேறு அத்தனையும் உளறி வைத்தது கோபத்தை மேலும் கிளறியது.
“டாட் ப்ளீஸ் சீக்கிரம் சொல்லுங்க. அங்க பார்ட்டிய பாதி ல விட்டுட்டு வந்து இருக்கேன் ” என்று கூறிய மகனை திட்ட வேண்டும் போல இருந்தது . பின்னே இவனாவது ஒரு முறை தனக்கு போனில் அழைத்து விசாரித்து இருந்தால் டீல்கள் கையை விட்டு போயிருக்காதே. ஆனால் மகனிடம் கோபத்தை காட்ட பிடிக்காமல் “இல்ல நீ வர லேட்டாகவும் வேற ஆள வச்சு முடிச்சுட்டேன். நீ கிளம்பு” என்றவர் விறுவிறுவென தன் அறைக்குள் சென்று கதவை அடைக்க தீபக் ஒரு தோள் குலுக்கலுடன் மீண்டும் கிளம்பி விட்டான்.
அலுவலகம் வந்து தன் காரை நிறுத்திவிட்டு யுவா இறங்க வரதனும் இறங்கினான். சீனு வை தன் அலுவலகம் செல்ல பணித்து விட்டு வரதன் மட்டுமே வந்து இருந்தான். இருவரும் சில பல வேலைகளை முடித்து விட்டு அலுவலகத்தில் நுழையும்போது மதிய உணவு இடைவேளை நேரம். ஊழியர்கள் அனைவரும் சாப்பிட சென்று இருக்க யுவா தன் கேபினில் நுழைந்தாள். அவளைப் பின் தொடர்ந்து வந்தான் வரதன். உள்ளே நுழைந்த யுவா ஒரு நொடி நின்று விட்டு உடனே தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு “அனிதா” என்று அழைத்தாள்.
“எஸ் மேம்” என்று வந்து நின்றவளின் கையை பார்த்தாள். “என்ன ஃபைல்ஸ் அது?” என்று கேட்க ” நீங்க கேட்டு இருந்திங்களே மேம் ரெடி பண்ண சொல்லி அதான்” என்று அனிதா பதிலளிக்க அதை மேசையில் வைக்க சொல்லி விட்டு “சாப்பிட்டு வந்து மீத வேலைய கவனி” என்று யுவா சொல்லி விட அனிதா இடத்தை விட்டு நகர்ந்தாள்.
தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியேறியவளை நிறுத்தி “சாப்பாடு கொண்டு வந்து இருக்கியா? ” என்று வினவினாள். அனிதா தந்தை இறந்த பின்பு மதிய உணவை செய்து எடுத்து வர பிடிக்காமல் பட்டினியாக இருந்து விடுவாள். அப்போதும் மதிய நேரம் அலுவலக கேன்டீனில் சாப்பிட வைத்துவிடுவாள் யுவா. ஆனாலும் சில நேரங்களில் யுவா அருகில் இல்லாத போது சாப்பாடை தவிர்த்து விடுவாள்.
“இருக்கு மேம். அடை கொண்டு வந்து இருக்கேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள். வரதன் எதுவும் பேசாமல் இருவரையும் பார்வையால் எடை போட்ட படி அமர்ந்து இருந்தான். அனிதா கிளம்பி விட “வா வரா சாப்பிடலாம் ” என்று யுவா அழைத்துச் சென்றாள்.
யுவா வின் வீட்டில் இருந்து வந்த உணவை இருவரும் பரிமாறி சாப்பிட்டனர். வேலையை பற்றி மட்டுமே பேசிக் கொண்டு இல்லாமல் நண்பர்களாகவும் பல விசயங்களை பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.
அதற்குள் அனிதாவும் உணவை முடித்து விட்டு வந்து இருந்தாள். வேலை தொடங்கியது. அனிதா பக்கத்தில் நின்றபடி யுவா வரதன் பேசிய விசயங்களை குறிப்பாக எடுத்துக் கொண்டாள். வரதன் வேலை முடிந்து கிளம்பும் வரை அனிதா அவனை நிமிர்ந்து பார்க்கவேயில்லை. ஆனால் வரதன் கண் அவளை கண்காணித்துக் கொண்டு தான் இருந்தது. யுவா இதை கண்டும் காணாமல் இருந்து விட்டாள்.
தன் நண்பனுக்கு அனிதாவின் மீது ஆர்வம் காதல் எல்லாம் இருப்பது தெரியும். ஆனால் அனிதா ஒரு முறை கூட அப்படி எந்த ஒரு விசயத்தையும் வெளியே காட்டியது இல்லை. வரதனுக்கே சந்தேகம் தான். அனிதா வின் மனதில் என்ன இருக்கிறது என்று அவனுக்கு தெரியாது . தெரிந்து கொள்ள எடுத்த முயற்சியும் தோல்வியில் தான் முடிந்தது.
காலம் வரதனுக்கும் அனிதாவிற்கும் என்ன வைத்துக் காத்து இருக்கிறதோ..
*.*.*.*.*.*.*.*.
மாலை வீடு திரும்பிய வரதனை வரவேற்றது அந்த மிகப்பெரிய வீட்டின் வெற்று ஹால். வீட்டில் நுழையும் போதே வெறுமை தாக்க அதை புறம் தள்ளியாவாறு “ஜான்..” என்று சத்தமாக குரல் கொடுக்க, சீருடையில் வந்து நின்றான் ஜான். அந்த வீட்டின் சமையல் துறை பொருப்பாளர். “க்ரீன் டீ. அனுப்பிடு அண்ட் எந்த ஸ்நாக்ஸ் பண்ணி வச்சு இருக்கியோ அதையும்” என்று உத்தரவு பிறப்பித்து விட்டு மாடிப்படி ஏறி வரதன் தனது அறைக்கு சென்று விட்டான். பத்து நிமிடத்தில் சிரமபரிகாரம் முடிந்து வேறு உடைக்கு மாறி வந்தவனை வரவேற்றது மேசையில் இருந்த க்ரீன் டீ.
அதை குடித்த படி மீண்டும் வேலையில் மூழ்கி விட்டான். வரதன் வீடு இப்படி தான். இந்த நேரம் தந்தை எதாவது மீட்டிங்கில் இருப்பார். தாயார் ஏதேனும் மாதர் சங்கம் கிட்டி பார்ட்டி யில் இருப்பார். நாகரிகம் கருதி ஒரே பிள்ளை தான் பெற்றனர். தம்பி தங்கை என இருந்து இருந்தால் வரதன் தனிமை பட்டு இருக்க மாட்டான். அதற்கும் வழி இல்லாமல் போக தனித்து வளற வேண்டிய நிலை. அவனுக்கு இது பழகி போனது தான். வேலை முடிந்து நிமிர்ந்து பார்க்க மணி ஒன்பதை காட்டியது . எழுந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் அறைக்கே உணவை கொண்டு வர சொல்லி சாப்பிட்டு விட்டு மீண்டும் வேலை பார்த்தவன் மணி பனிரெண்டை கடக்க எடுத்து வைத்து விட்டு படுத்தான். எப்போதும் போல் இப்போதும் அனிதாவின் முகம் மனக்கண்ணில் தோன்ற அவளை நினைத்த படியே உறங்கி போனான்.
